திங்கள், 3 ஏப்ரல், 2017

தயாரிப்பாளர் சங்க தேர்தலில் விஷால் அணி வெற்றி !

Tamil Producers Council election: Vishal And Team gains Massive Victoryசென்னை: தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் நடிகர் விஷால் அணி அமோக வெற்றியைப் பெற்றுள்ளது. ஏற்கெனவே தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொதுச் செயலளர் பதவியை வகித்து வரும் விஷால், இதன் மூலம் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்துக்கு தலைவராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்துக்கு 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடைபெறுவது வழக்கம். கடந்த ஆண்டுகளில் நிர்வாக பொறுப்பை வகிந்த கலைப்புலி எஸ்.தாணு தலைமையிலான நிர்வாகத்தின் பதவிக் காலம் முடிவடைந்ததையடுத்து, புதிய நிர்வாகிகளை தேர்வு செய்யும் தேர்தல் இன்று சென்னை அண்ணா நகரிலுள்ள கந்தசாமி நாயுடு கல்லூரியில் நடைபெற்றது. தேர்தலில் நடிகர் விஷால் தலைமையில் புது அணி உருவானது. நம்ம அணி என்று உருவாக்கப்பட்ட இந்த அணியின் சார்பில் அணியின் சார்பில் இயக்குநர்கள் மிஷ்கின், பிரகாஷ்ஜ், கெளதம்வாசுதேவ்மேனன் உள்ளிட்டோர் போட்டியிட்டனர்.

இதே போல் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் முன்னேற்ற அணியின் சார்பில் ஆர்.ராதாகிருஷ்ணன் தலைவர் பதவிக்கு போட்டியிட்டார். இதில் சுரேஷ் காமாட்சி, கே.ராஜன், விஜயமுரளி உள்ளிட்டோர் இந்த அணியின் சார்பில் போட்டியிட்டனர்.
இதேபோல 3-வது அணியாக தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்களின் எழுச்சி கூட்டணி சார்பில் கே.ஆர். தலைவர் பதவிக்கு போட்டியிட்டார். இந்த அணியின் சார்பில் ஏ.எம்.ரத்னம், பி.டி.செல்வகுமார், ஏ.எல்.அழகப்பன், எஸ்.ஏ.சந்திரசேகரன், எஸ்.கதிரேசன் உள்ளிட்டோர் நிர்வாக பொறுப்பை கைப்பற்ற போட்டியில் இருந்தனர்.
தலைவர், துணைத் தலைவர், செயலாளர், பொருளாளர் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் என 27 பதவிகளுக்கு தேர்தல் நடைபெற்றது.
வாக்குப்பதிவு காலை முதலே விறுவிறுப்பாக நடைபெற்றது. இந்த நிலையில் இரவில் முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில் அதிக வாக்குகள் பெற்று விஷால் அணியினர் அமோக வெற்றி பெற்றனர்.
விஷால் அணியினர் 478 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றனர். ராதாகிருஷ்ணன் அணியினர் 335 வாக்குகளை பெற்றனர். இதையடுத்து விஷால் அணியினர் 143 வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றியைப் பெற்றனர்.
கேயார் அணி 224 வாக்குளைப் பெற்றது.  tamiloneindia.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக