தேசிய வங்கிகளில் விவசாயிகளின் பயிர்க்கடன்களை தள்ளுபடி செய்வது, வறட்சி நிவாரணம் வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்கத்தின் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் கடந்த மாதம் 14–ந் தேதி முதல் தமிழக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இன்று அவர்களின் போராட்டம் 28வது நாளை எட்டியுள்ளது.
இந்த நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பிரதமரை சந்திப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது என கூறி அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு அய்யாக்கண்ணு மட்டும் பிரதமரை சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பிரதமர் அலுவலகம் முன்பு விவசாயிகள் ஆடைகளை களைத்து நிர்வாண போராட்டத்தில் ஈடுபட்டனர். பிரதமரை சந்திப்பதாக அழைத்துச் சென்று ஏமாற்றி விட்டனர் என்று அய்யாக்கண்ணு குற்றம் சாட்டினார்.
இதையடுத்து தமிழக விவசாயிகளை போலீசார் கைது செய்தனர்t நக்கீரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக