திங்கள், 17 ஏப்ரல், 2017

விஜயபாஸ்கர் தினகரன் விரைவில் கைது ...

‘பரப்பன அக்ரஹாரா சிறைக்கு இன்னும்கூட தினமும் சென்று வரும் ஒரே நபர் இளவரசியின் மகன் விவேக் மட்டும்தான். சசிகலாவும், இளவரசியும் பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டதிலிருந்து பெரும்பாலும் பெங்களூருவில்தான் இருக்கிறார் விவேக். ஓரிரு நாட்கள் சென்னை வந்தாலுமேகூட, மதியத்துக்குப் பிறகு சென்னைக்கு வந்துவிட்டு மறுநாள் காலையில் ஃபிளைட் பிடித்து பெங்களூருவுக்கு பறந்துவிடுகிறார். கடந்த இரண்டு நாட்களாக சசிகலாவும் கடும் அப்செட்டில் இருக்கிறாராம். விவேக் பார்ப்பதற்காக சிறைக்குள் செல்லும்போதெல்லாம், புலம்ப ஆரம்பித்துவிடுகிறாராம் சசிகலா. ‘அவனை (தினகரன்) தேர்தலிலேயே நான் நிற்க வேண்டாம்னு சொன்னேன். அவன் கேட்கவே இல்லை. இப்போ எல்லா பிரச்னைகளும் வந்துடுச்சு. அவன் தேர்தலில் நிற்காமல் இருந்திருந்தால் இவ்வளவு சிக்கல் வந்திருக்காது. பணம் கொடுத்தால் பிரச்னை வரும்னு தெரியும். எலெக்‌ஷன் கமிஷன் பார்த்துட்டு இருக்குன்னு தெரியும்.
அப்படியிருந்தும் எல்லோரும் பார்க்கிற மாதிரியா பணம் கொடுப்பாங்க. சின்னம் போயிடுச்சு. கட்சி பேரும் போயிடுச்சு. இப்படியே அவன் பண்ணிட்டு இருந்தா, நான் வெளிய வர்றதுக்குள்ள கட்சியே காணமல் போயிடும். அக்காவும், நானும் இதுக்குத்தான் கஷ்டப்பட்டோமா? இதெல்லாம் ஏன் அவனுக்குப் புரியமாட்டேங்குது? எல்லாத்தையும் எடுத்தோம் கவுத்தோம்னு பண்ணிட்டு இருக்கான். இந்த சூழ்நிலையில், நான் அவன்மேல நடவடிக்கை எடுத்தா அது இன்னும் சிக்கலை உண்டாக்கிடும் என்பதாலதான் நான் அமைதியா இருக்கேன். அவனை நான் பார்க்கணும்னு சொல்லு!’ என்று சசிகலா சொன்னதாகச் சொல்கிறார்கள்’ - இதுதான் நாம் அன்று சொன்ன தகவல்.
அதன்பிறகு விவேக், இந்த தகவல்களை தினகரனுக்கு சொல்லியிருக்கிறார். ஆனாலும் சிறைக்குச் சென்று சசிகலாவை சந்திக்கலாமா, வேண்டாமா என்ற நீண்ட யோசனையில் இருந்தார் தினகரன். இந்த சூழ்நிலையில்தான் இன்று காலை இரட்டை இலைச் சின்னத்தை கைப்பற்ற 60 கோடி ரூபாய் பேரம் பேசியதாக தினகரன் மீது டெல்லி போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த நேரத்தில்தான் இன்று காலை சென்னையிலிருந்து பெங்களூரு கிளம்பிப்போனார் தினகரன். பரப்பன அக்ரஹாராவில் இருந்து ஓசூர் செல்லும் வழியில் உள்ள அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டிக்குச் சொந்தமான பண்ணை வீட்டுக்குப் போனார். அங்கே அதிமுக-வின் முக்கிய நிர்வாகிகள் சிலர் காத்திருந்தனர். அவர்களிடம் நீண்டநேரம் ஆலோசனையில் ஈடுபட்டிருந்தார் தினகரன்.
நேரம் ஆகிக்கொண்டே இருந்தது. ஆனால் தினகரன் அங்கிருந்து கிளம்பவில்லை. அவர், கிளம்பாமல் நேரத்தைக் கடத்தியதற்கு இரண்டு காரணங்கள் சொல்கிறார்கள். முதல் காரணம், தினகரன் சிறைக்கு வருவதற்கு அனுமதி வாங்குவதற்காக பரப்பன அக்ரஹாராவில் காத்திருந்தார் வழக்கறிஞர் மூர்த்தி ராவ். அவரிடமிருந்து 6 மணி வரையில் பாசிட்டிவான தகவல் வரவில்லை என்கிறார்கள். அடுத்த காரணம், தினகரன் மீது வழக்கு பதிவு செய்திருக்கும் டெல்லி போலீஸ், அடுத்த கட்ட நடவடிக்கையில் இறங்கினால் தினகரன் கைது செய்யப்படலாம். இந்த நேரத்தில் பரப்பன அக்ரஹாரா போனால், அது ஒட்டுமொத்தமாக போலீஸ் கவனத்தை தன் பக்கம் ஈர்க்கும். அதனால் என்ன நடக்கிறது என்பதை பார்த்துக்கொண்டு ஜெயில் பக்கம் போகலாம் என்று தினகரன் நினைத்திருக்கலாம் என்றும் சொல்கிறார்கள்” என்று முடிந்தது அந்த மெசேஜ்.
அதைத் தொடர்ந்து வந்து விழுந்தது அடுத்த மெசெஜ்.
“அமைச்சர் விஜயபாஸ்கர் உதவியாளர் வீட்டிலிருந்து புதிய ரூபாய் நோட்டுகளை வருமான வரித் துறையினர் கைப்பற்றினார்கள் இல்லையா... இந்த வழக்கை சிபிஐ-க்கும் அமலாக்கத் துறைக்கும் மாற்றலாமா என மத்திய அரசு யோசித்து வருகிறது. அப்படி மாற்றினால், விஜயபாஸ்கர் கைது செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது. மத்திய அரசுக்கு கோபம் விஜயபாஸ்கர் மீது இல்லை. தினகரனை படிய வைப்பதற்காக அடுத்தடுத்து வைக்கப்படும் செக் எல்லாமே விஜயபாஸ்கரைச் சுற்றியே இருக்கிறது. டெல்லியில் தினகரன் மீது பதியப்பட்டிருக்கும் வழக்கின் பின்னணியிலும் சில பிஜேபி பிரமுகர்கள் தலையீடு இருப்பதாகவே சொல்கிறார்கள். ஒருபக்கம் தினகரன் மீது வழக்கு, இன்னொருபக்கம் விஜயபாஸ்கர் கைது என, அடுத்தடுத்த அதிரடிகளை ஒரே நேரத்தில் நடத்தப்போகிறார்கள் என்றும் சொல்கிறார்கள். தினகரன் மீது பதியப்பட்ட வழக்குகளின் அடிப்படையில், அவரை கைது செய்வதற்கு முகாந்திரம் இருக்கிறதா என்றும் வழக்கறிஞர்களுடன் தீவிர ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்கள்’ என்று சொல்கிறார்கள் விவரமறிந்தவர்கள்!” என்ற மேசேஜ் படித்து முடித்தபோது ஆஃப்லைனில் போயிருந்தது வாட்ஸ் அப்.  மின்னம்பலம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக