திங்கள், 24 ஏப்ரல், 2017

பன்னீருக்கு ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்க மத்திய அரசு உத்தரவு!

ஓ.பி.எஸ்-ஸுக்கு ஒய் பிரிவு பாதுகாப்பு!
தமிழக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்துக்கு, இன்று ஏப்ரல் 24ஆம் தேதி முதல் ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்கப்படுகிறது.
ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் அதிமுக இரண்டாக உடைந்த நிலையில், ஆ.ர்.கே நகர் தொகுதிக்கான இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. அதையடுத்து, இரு அணிகளும் தீவிரமாக வாக்கு சேகரிக்கும்போது டி.டி.வி.தினகரன் தரப்பினரால் ஓ.பி.எஸ் உயிருக்கு ஆபத்து இருப்பதாகப் புகார் எழுந்தது.  அப்படீய பன்னீரின் மகன் தம்பி போன்றவர்க்கும் கூடவே திருப்பதி ரெட்டிகாருவுக்கும் கொடுங்க...

அதையடுத்து , தினகரன் தரப்பினரால் ஓ.பி.எஸ். உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளதால், அவருக்கு உயர் பாதுகாப்பு வழங்கும்படி, அவரது அணியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள், கடந்த ஏப்ரல் 21-ஆம் தேதி, மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்தனர். அதன்பேரில், இதை ஏற்றுக்கொண்ட மத்திய அரசு, ஓ.பன்னீர் செல்வத்துக்கு ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்க உத்தரவிட்டது. அதைத்தொடர்ந்து , இன்று ஏப்ரல் 24ஆம் தேதி முதல் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்துக்கு ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்கப்படுகிறது. இந்த ஒய் பிரிவு பாதுகாப்பு படையில், மத்திய பாதுகாப்புப் படையைச் சேர்ந்த எட்டு துணை ராணுவப் படை வீரர்கள் பாதுகாப்பில் ஈடுபடுவார்கள். இவர்கள் ஓ.பி.எஸ் எங்கு சென்றாலும் உடன் சென்று பாதுகாப்பு வழங்குவார்கள். மின்னம்பலம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக