வியாழன், 27 ஏப்ரல், 2017

நாஞ்சில் சம்பத்: தினகரன் ஆதாரம் இல்லாமல் கைது செய்ப்பட்டுள்ளார்


சென்னையில் அதிமுக பேச்சாளர் நாஞ்சில் சம்பத் வியாழக்கிழமை மாலை செய்தியாளர்களை சந்தித்தார்.&அப்போது அவர், டிடிவி தினகரன் மீதான வழக்கு குறித்து எதுவும் சொல்ல விரும்பவில்லை. வழக்கு விசாரணைக்கு யாரும் இடையூறாக இருக்க மாட்டோம். தினகரனும் அதனை விரும்பமாட்டார். அவரை காப்பாற்றுவதற்கு எந்த விலையும் கொடுக்க நாங்கள் தயாராக இருக்கிறோம்.&கேள்வி : சுகேஷ் சந்திராவிடம் தினகரன் பேசியதாக செய்தி வெளியானதே? செய்திதான். பொதுவாழ்வில் இதுபோன்ற செய்திகள் வரும். நீங்க இதனை பெரிதாக எடுத்துக்கொள்கிறீர்கள். நாங்கள் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.

கேள்வி : தினகரன் ஏன் முன்ஜாமீன் எடுக்கவில்லை?

பதில் : தேவையில்லை

கேள்வி : உங்கள் சந்தேகப் பார்வை யார் மீது உள்ளது?

பதில் : டெல்லி.. டெல்லி.. .டெல்லி.. 

கேள்வி : தினகரன் திரும்பி வரும்போது தமிழ்நாட்டின் தலைவிதியை மாற்றுவார் என்று சொல்கிறீர்கள். ஆனால் தினகரனுக்கு ஆதரவாக ஒரு அதிமுக எம்எல்ஏக் கூட வரவில்லையே?

பதில் : அவரவர் அவரவர்களை தக்க வைத்துக்கொள்கிறார்கள். அவரவர்களுக்கு அரசியல் இருப்பு முக்கியம். 

கேள்வி : அதிமுக யாரிடம் இருக்கிறது. சட்டமன்ற உறுப்பினர்கள் ஒருவர் கூட இங்கு இல்லையே?

பதில் : எங்கள் பக்கம் 87 சட்டமன்ற உறுப்பினர்கள் இருக்கிறார்கள்.

கேள்வி : ஆதாரம் இல்லாமல் தினகரன் கைது செய்யப்பட்டுள்ளாரா?

பதில் : கண்டிப்பாக. நிச்சயமாக 

கேள்வி : டெல்லி போலீசார் எந்த வகையில் விசாரிக்கிறார்கள். வாக்குமூலம் பெறுவதற்காகவா?

பதில் : 37 மணி நேரம் ஏற்கனவே விசாரணை நடத்தியுள்ளனர். இனி விசாரிக்க என்ன இருக்கிறது. இது ஒரு நாடகம். 

கேள்வி : 80 சட்டமன்ற உறுப்பினர்கள் உங்கள் பக்கம் இருக்கிறார்கள் என்று...?

பதில் ; எண்பத்தி ஏழு, ஏன் ஏழை குறைக்கிறிர்கள்.

கேள்வி : 87 சட்டமன்ற உறுப்பினர்கள் இருப்பதாக சொல்கிறீர்களே நிருபிப்பீர்களா?

பதில் : யாருக்கிட்ட நிருபிக்கணும்

கேள்வி : ஒருவர் கூட இங்கு இல்லையே. வழக்கமாக இதுபோன்று தலைவர்கள் கைது செய்யப்படும்போது தொண்டர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் வந்து அவர்களுக்கு ஆதரவாக இருப்பதை காண்பிப்பார்களே?

பதில் : ஆதரவாகத்தான் இருக்கிறார்கள்.

கேள்வி : சசிகலா பேனர்கள் அகற்றப்பட்டுள்ளதை எப்படி பார்க்கிறீர்கள்?

பதில் : ஒரு சரித்திர அநீதி. அவரால் (சசிகலா) பதவி பெற்றவர்கள்தான் கீழே இறக்கினார்கள்.

கேள்வி : அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் சசிகலா, தினகரன் குடும்பத்தினரை ஒதுக்கிவைத்துவிட்டோம், ஓரம்கட்டிவிட்டோம் என்று சொல்கிறார்கள். நீங்கள் 87 எம்எல்ஏக்கள் ஆதரவு உள்ளது என்று சொல்கிறீர்களே?

பதில்: 123 எம்எல்ஏக்கள் எங்களுடன் இருந்தார்கள். அவர்களை ஒருங்கிணைத்தது யார்.

கேள்வி : உங்கள் நிலைப்பாடு என்ன?

பதில் : இரண்டு அணியும் இணைந்தால் மகிழ்ச்சி அடைவேன். பொதுச்செயலாளருடைய கண் அசைவு இல்லாமல், அவருடைய கையெழுத்து இல்லாமல் இந்தக் கட்சியில் எதையும் செய்ய முடியாது. 

கேள்வி : ஒரு பக்கம் இரண்டு அணியும் ஒன்று சேர முயற்சிகள் நடக்கிறது. இன்னொரு பக்கம் தினகரன் கைது செய்யப்பட்டு விசாரணை நடக்கிறது. பொதுச்செயலாளருடைய கண் அசைவு இல்லாமல், அவருடைய கையெழுத்து இல்லாமல் இந்தக் கட்சியில் எதையும் செய்ய முடியாது என்கிறீர்கள். உங்கள் பக்கம் 87 எம்எல்ஏக்கள் உள்ளனர் என்கிறீர்கள். இவையெல்லாம் திட்டமிட்ட நாடகமா?

பதில்: நாடகத்தை யாரோ நடத்துகிறார்கள்.

கேள்வி : தெளிவாக ஏன் சொல்லவில்லை. யாரோ என்றால், யார் நடத்துகிறார்கள்?

பதில் : டெல்லி... டெல்லி... டெல்லி... டெல்லி... டெல்லி...

இவ்வாறு பதில் அளித்தார். 

தொகுப்பு: ராஜவேல்  நக்கீரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக