திங்கள், 17 ஏப்ரல், 2017

டெல்லியில் விவசாயிகள் புல்-வைக்கோல் தின்னும் போராட்டம்

டெல்லியில் தொடர் போராட்டம் நடத்தி வரும் தமிழக விவசாயிகள், இன்று மாடுகளைப் போன்று புல் மற்றும் வைக்கோலைத் தின்னும் போராட்டம் நடத்தினர். புதுடெல்லி: தமிழக விவசாயிகள் கோரிக்கைகளை வலியுறுத்தி ஒரு மாதத்திற்கும் மேலாக டெல்லி ஜந்தர்மந்தரில் வெயில், குளிர், மழை என்று பாராமல் தொடர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். எலிக்கறி, பாம்புக்கறி தின்று போராட்டம், மொட்டை அடித்து, மண் சோறு சாப்பிட்டு, சேலை அணிந்து, தாலி அறுத்து போராட்டம், குட்டிக்கரணம் அடித்து போராட்டம் என தினமும் வித்தியாசமான முறையில் அரசாங்கத்தின் கவனத்தை ஈர்க்கும் வகையில் போராட்டம் நடத்தி வருகிறார்கள். அவர்களின் போராட்டத்திற்கு தமிழகத்தைச் சேர்ந்த அரசியல் கட்சி தவைலவர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.


நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் போராட்டத்தில் இன்று விவசாயிகள் புல் மற்றும் வைக்கோலை தின்னும் போராட்டம் நடத்தினர். இதற்காக, விவசாயிகள் சிலர் முட்டிப்போட்டு மாடுகளைப் போல நிற்க, அவர்களது வாயில் புல்லும், வைக்கோலும் வைக்கப்பட்டது. பிற விவசாயிகள் அவர்களை கயிற்றால் கட்டி மேய்ச்சலுக்கு கொண்டு செல்வதைப் போன்ற காட்சி சித்தரிக்கப்பட்டது.  மாலைமலர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக