புதன், 19 ஏப்ரல், 2017

தமிழக அரசை ஹைஜாக் செய்த பாஜக? மோசமான அதிகார துஷ்பிரயோகம்!

பாலாஜி பூபதி : இன்று மதிய மீட்டிங் கேன்சல், கட்சியில் இருந்து நேற்று முதல் ஒதுங்கி தான் இருக்கிறேன் - தினகரன் பேட்டி
யோசிக்க யோசிக்க நம்பிக்கை துரோகங்களும், விசுவாச துரோகங்களும் தான் விஞ்சி நிற்கின்றன.. நமக்கு சசிகலாவை பிடிக்கவில்லை, தினகரனை பிடிக்கவில்லை, இது எல்லாம் சரி.. ஆனால்..,
ஜெ சாகும் வரை, இத்தனை ஆண்டுகளாக ஜெயலலிதாவிற்கு பிடித்த சசிகலா யாரை சொல்கிறாரோ, அவருக்கே அதிமுகவில் சீட்டு கொடுத்தவர் ஜெ.. இன்று பதவியில் இருக்கும் அனைவருமே, சசிகலா மூலம் சீட்டு வாங்கி மந்திரி ஆனவர்கள் தான்.. ஒருவர் கூட ஜெ நேரடி தேர்வு அல்ல.. இப்படி அனைத்து பதவி சுகம், சொத்து சுகம் எல்லாம் சசிகலா மூலம் அனுபவித்தவர்கள் தான் இன்று அந்த நம்பிக்கைத் துரோகத்தை செய்துள்ளார்கள்.. சசிகலா குடும்பம் மட்டுமே அதிமுகவில் கொள்ளையடித்து வந்ததா ?! ஓபிஎஸ், நத்தம் விஸ்வநாதன், விஜயபாஸ்கர், எடப்பாடி என எல்லோருமே அத்தனை பரிசுத்தமானவர்களா, ஏன் தினகரன் குடும்பத்தின் மீது இத்தனை அழுத்தம்.., அவர்கள் இருந்தால் பாஜகவின் கரத்தை தடுப்பார்கள், எனவே அவர்களை அறவே ஒதுக்கவே இத்தனை திட்டங்கள், செயல்பாடுகள்..

சசிகலா குடும்பம் இத்தனை ஆண்டுகளாக ஜெயலலிதாவிற்கு தெரியாமலா இத்தனை செல்வாக்கு பெற்று இருந்தது ?!! மீண்டும் சொல்கிறேன், இது சசிகலாவுக்கு ஆதரவு தேடும் பதிவல்ல.. இந்த நம்பிக்கை துரோகிகள் பதவிக்காக எதையும் செய்வார்கள் என்பதை சொல்ல நினைக்கும் பதிவு..
திடீரெனெ ஐடி ரெய்டு, ஆர்.கே.நகர் தேர்தல் ரத்து, அடுத்து கடந்த திங்கள் அன்று தினகரன் மீது வழக்கு, அது உண்மையா பொய்யா என எதுவும் தெரியாமல், அரெஸ்ட் வாரண்ட்.., டெல்லி போலீஸ் சென்னை வருகை, ஆனால், அரெஸ்ட் செய்யவில்லை.. செவ்வாய் கிழமை திடீரெனெ அமைச்சர்கள் ஆலோசனை, தினகரன் குடும்பம் இனி இல்லை என அறிவிப்பு.. இன்று தினகரன் கட்சிக்குள் தனது ஆதரவாளர்களுடன் எதுவும் செய்தால், உறுதியாக இன்று கைது செய்யப்படலாம்.. எத்தனை பெரிய அதிகார துஷ்ப்பிரயோகம், எத்தனை பெரிய ஆதிக்க அரக்கத்தனம் ?!! இந்த நிலைமை நாளை மத்திய அரசை எதிர்க்கும் யாருக்கும் வரலாம்.., மதசார்பற்ற சக்திகள் பழைய சிறு பகைகளை மறந்துவிட்டு ஒன்று சேர வேண்டிய தருணம் வந்துவிட்டது... இது ஜனநாயகத்திற்கு விடப்பட்ட மிகப்பெரிய அச்சுறுத்தல்..!!  முகநூல் பதிவு   தாமோதரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக