வியாழன், 13 ஏப்ரல், 2017

ஹாலிவூட் நடிகர்களை மிமிக்கிரி ... கமல் ஹாசன் ..

நடிகர் கமல்ஹாசன், அவருக்கு விருப்பமான ஹாலிவுட் நடிகர்கள் பேசி நடித்த வசனங்களை, அவர்களைப் போலவே பேசிக் காட்டிய வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் திரையுலகில் சுமார் 50 ஆண்டுகளாக பயணிக்கும் நடிகர் கமல்ஹாசன். தன்னுடைய அழுத்தமான நடிப்பாலும் வித்தியாசமான கதாபாத்திரங்களாலும் உலக அளவில் அறியப்பட்டவர்.  அவர் தொடர்ச்சியாக வித்தியாசமான கதாபாத்திரங்களையும், கதைக்களத்தையும் தேர்வு செய்து தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்துக்கு கொண்டு சென்றதில் முக்கிய இடத்தைப் பெற்றுள்ளார். அவர் வெளிநாட்டு தொகுப்பாளினி ஒருவருக்கு பேட்டி அளிக்கும் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. அந்த பேட்டியில் கமல்ஹாசன் தனக்கு விருப்பமான உலக நடிகர்களைப் போல பேசிக்காட்டி அசத்தினார். மார்லன் பிராண்டோ, ஜான் வேய்ன், ராபர்ட் டி நிரோ ஆகியோரைப் போல பேசிக் காட்டி அசத்தினார் கமல்.
அந்தப் பேட்டியின் போது சிவாஜி கணேசன் தனது முன்மாதிரி என்று தெரிவித்தார். மேலும், சிவாஜி கணேசன் நடித்த 'கட்டபொம்மன்' படத்தில் வரும் கிஸ்தி, திரை, வட்டி வசனத்தையும் பேசிக் காட்டினார். சிவாஜியின் வசனத்தை அந்தத் தொகுப்பாளினியும் பேச முயற்சி செய்தார். அந்தத் தொலைக்காட்சிப் பேட்டி சில வருடங்களுக்கு முன்னர் எடுக்கப்பட்டிருக்கலாம் என்று தெரிகிறது.  விகடன்

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக