வியாழன், 13 ஏப்ரல், 2017

கட்டிட இடிபாட்டுக்குள் 20 பேர் சிக்கியுள்ளனர் .. வேலூர் தனியார் பள்ளிகூட கட்டிடம் ..

பள்ளிக் கட்டிடம் இடிபாடுவேலூர் மாவட்டம், காட்பாடியில் உள்ள தனியார் பள்ளிக்கூடத்தின் கட்டடம் இடிந்து விழுந்தது. அந்த விபத்தில் 20-க்கும் மேற்பட்டோர் இடிபாடுகளில் சிக்கியுள்ளனர். அவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
வேலூர் மாவட்டம், காட்பாடி அருகில் உள்ள தனியார் பள்ளியில் புதிதாக பள்ளிக் கட்டடம் ஒன்று கட்டப்பட்டு வருகிறது. இந்தக் கட்டடத்தை கட்டும் பணியில் சுற்றுவட்டாரத்தில் இருந்து கட்டடத் தொழிலாளர் பலர் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில், இன்று மதிய நேரத்தில் கட்டடம் திடீரென இடிந்து விழுந்தது. அதில் அங்கு வேலை செய்த தொழிலாளர்கள் சுமார் இருபதுக்கும் மேற்பட்டோர் இடிபாட்டில் சிக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்ட மூன்று பேர் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இன்னும் எத்தனை பேர் இடிபாடுகளில் சிக்கியுள்ளனர் என்ற தகவல் சரிவர தெரியவில்லை. மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனால் காட்பாடி பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது.  விகடன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக