வெள்ளி, 14 ஏப்ரல், 2017

ஆப்கான் மீது அமெரிக்கா பிரமாண்டமான குண்டு ஒன்றை வீசியுள்ளது 21000 கிலோ எடை?


வாஷிங்டன்: ஆப்கானிஸ்தானில் ஐ.எஸ் தீவிரவாதிகளின் இடத்தை குறிவைத்து அமெரிக்கா குண்டுவீசி தாக்குதல் நடத்தியுள்ளது. ஆப்கானிஸ்தான் - பாகிஸ்தான் எல்லை அருகே இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக அமெரிக்க பாதுகாப்பு முகமை பென்டகான் உறுதி செய்துள்ளது. ஆப்கானிஸ்தான் மீது மிகப்பெரிய அணு அல்லாத குண்டை அமெரிக்கா வீசியதாகவும் பென்டகான் தெரிவித்துள்ளது. ஆப்கானிஸ்தானின் நாங்கார்ஹார் மாகாணத்தில் அச்சின் மாவட்டத்தில் உள்ள சுரங்கப்பாதை மீது ஜிபியு - 43பி எனப்படும் மிகப்பெரிய அணுசக்தி அல்லாத பேரழிவு ஏற்படுத்தும் வெடிகுண்டை வீசி தாக்குதல் நடத்தப்பட்டதாக, ஆப்கானிஸ்தானில் உள்ள அமெரிக்க படைகள் அறிக்கை வெளியிட்டுள்ளன. நேற்று மாலை 7.32 மணியளவில் இந்த தாக்குதல் நிகழ்ந்ததாக கூறப்படுகிறது. ஆப்கானிஸ்தானில் உள்ள ஐ.எஸ். தீவிரவாதிகள் மீது நடத்தப்படும் முதல் போர்முறை தாக்குதல் இது என்று பென்டகர் செய்தித்தொடர்பாளர் ஆடம் ஸ்டம்ப் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக