புதன், 1 மார்ச், 2017

மோடியின் குஜராத்தி ஊழல் பெருச்சாளி புதிய தமிழக ஆளுநர்?... ஆனந்தி பென் பட்டேல்


மோடியின் கூஜாவை தமிழ்நாட்டிற்கு கவர்னர் ஆக்கியிருக்கின்றனர். இன்னொரு கூஜா நமது மாண்புமிகு முதல்வர். ஜனநாயகம் எத்தகைய ஆபத்தான விளையாட்டு என்பது புரிகிறது. மனிதர்கள் எத்தகைய கொடூர மனம், செயல் கொண்டவர்கள் என்பது ஆணித்தரமாகப் புரிகிறது. நாம் கடும் ஆபத்துகளை எதிர்நோக்கியிருக்கிறோம் என்பதும் புரிகிறது. தமிழக கவர்னர் ரோசய்யா பதவிக்காலம் முடிந்து பல மாதங்கள் ஆகிவிட்ட நிலையில் மகாராஷ்டிரா கவர்னர் வித்யாசாகர் ராவ் பொறுப்பு கவர்னராக செயல்பட்டு வருகிறார். தமிழகத்திற்கு என தனி கவர்னர் தேவை என ஆளுங்கட்சி உள்பட அனைத்து கட்சிகளும் மத்திய அரசை வலியுறுத்தி வரும் நிலையில் தற்போது புதிய தமிழக கவர்னர் குறித்த தகவல்கள் வெளிவந்துள்ளது. தமிழகத்தின் புதிய கவர்னராக முன்னாள் குஜராத் முதல்வர் ஆனந்தி பென் பட்டேல் நியமிக்கப்பட அதிக வாய்ப்புள்ளதாக மத்திய அரசு வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் சமீபத்தில் ஏற்பட்ட அரசியல் நெருக்கடி தற்போது ஓரளவு சீரடைந்துள்ளதாலும், மகாராஷ்ரா ஆளுநராக இருக்கும் வித்யாசாகர் ராவ் அவர்களுக்கு பணிச் சூழல் அதிகம் இருப்பதாலும் விரைவில் புதிய கவர்னர் குறித்த அறிவிப்பு வெளிவரும் என்று கூறப்படுகிறது. பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவராகிய ஆனந்தி பென் பட்டேல், நரேந்திர மோடி பிரதமர் ஆனதை அடுத்து குஜராத் முதல்வரக கடந்த 2014-ம் ஆண்டு பதவியெற்றார். பின்னர் அவர் 2016-ம் ஆண்டு பதவி விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது.  வெப்துனியா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக