வியாழன், 2 மார்ச், 2017

உயர்கல்வியில் இடஒதுக்கீடு ரத்து: உச்ச நீதிமன்றம்! .... சமுகநீதிக்கு அநீதி !


கடந்த 27 ஆண்டுகளுக்கு முன்னால் உச்ச நீதிமன்றத்தால் பரிந்துரைக்கப்பட்ட உயர்கல்வி சேர்க்கையில் இடஒதுக்கீடு கூடாது என்ற ஆலோசனை உடன் நடைமுறைப்படுத்த வேண்டும் என உச்ச நீதிமன்ற அமர்வு மத்திய மாநில அரசுகளை அறிவுறுத்தியுள்ளது.
சுதந்திரமடைந்து 68 ஆண்டுகள் கடந்த நிலையிலும் சில ' முன்னுரிமைகள் மாறாமலே இருப்பது' வருத்தமளிக்கிறது என்றும் தேசிய நலன் கருதி உயர் கல்வி நிலையங்களில் உள்ள எல்லாவிதமான இட ஒதுக்கீடுகளும் நீக்கப்படத் தேவையான வலுவான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுக்க வேண்டுமெனவும் உச்சநீதிமன்றம் கடந்த செவ்வாயன்று வலியுறுத்தியுள்ளது.
உயர் சிறப்பு கல்விப்புலங்களுக்கு இடஒதுக்கீட்டு முறை அல்லாமல் தகுதி அடிப்படையிலேயே சேர்க்கை நடைபெற வேண்டும் என பலமுறை அறிவுறுத்தப்பட்டிருந்தபோதிலும் தகுதி அடிப்படையை மீறி இடஒதுக்கீடு முறை இன்னமும் பின்பற்றப்பட்டு வருவதாக நீதியரசர்கள் தீபக் மிஸ்ரா மற்றும் P.C.பந்த் தெரிவித்தனர்.

The fond of hope has remained in the sphere of hope. இந்த இடஒதுக்கீட்டு முன்னுரிமை பல ஆண்டுகளாக முடிவற்று நீடித்துக்கொண்டேயுள்ளது.
1988- ல் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பினை முழுவதுமாக ஏற்றுக்கொண்டு உயர் சிறப்பு மருத்துவக் கல்வி சேர்க்கையில் இடஒதுக்கீட்டுமுறை முழுமையாக ரத்து செய்யத் தேவையான உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டும். மத்திய மாநில அரசுகள் இதற்கான விதிமுறைகள் வகுக்கப்படவேண்டும் எனவும் கூறியுள்ளனர்.
தகுதி அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களுக்கு கிடைக்கவேண்டிய சிறப்புமுறை பயிற்சி இடஒதுக்கீட்டால் பாதிக்கப்படும் என்றும் தேர்வு விதிகள் இடஒதுக்கீடு அடிப்படையில் தளர்த்தப்படக்கூடாது என அரசுக்கு பல தீர்ப்பு முன்னுதாரணங்கள் மூலம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
உச்சநீதிமன்றம் 27 ஆண்டுகளுக்கு முன்பே தெரிவித்த தீர்ப்பை தாங்கள் எதிரொலிப்பதாகவும் தேசிய நலனை முன்னிருத்தும் இந்த நிலைப்பாட்டை அதிகாரத்தில் உள்ளோர் பாரபட்சமற்ற முறையில் அணுகி மதிப்பீடு செய்யவேண்டும் என கூறியுள்ளனர்.
தகுதியடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களுக்கு வழங்கவேண்டிய சிறப்பு முறை பயிற்சி, இடஒதுக்கீடு முறையால் பாதிக்கப்படும் என்றும் தேர்வு விதிகள் இடஒதுக்கீட்டு அடிப்படையில் தளர்த்தப்படக்கூடாது என அரசுக்கு பல தீர்ப்புகள் மூலம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஆந்திரா, தெலுங்கானா, தமிழ்நாடு மாநிலங்களில் உள்ள உயர் சிறப்பு மருத்துவ படிப்பு சேர்க்கைக்கான தகுதி குறித்து தொடரப்பட்ட பல்வேறு மனுக்களின் மீதான தீர்ப்பில் இக்கருத்துகள் கூறப்பட்டுள்ளன.மேற்படி மாநிலங்களை உறைவிடமாகக் கொண்ட மாணவர்கள் மட்டும் தேர்வுகள் எழுத அனுமதிக்கப்படவேண்டும்.இதன்மூலம் இருப்பிட அடிப்படையில் தேர்வாளர்களுக்கு இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் குடியரசுத்தலைவரின் அரசியலமைப்பு சட்ட சிறப்பு விலக்கு ஆணை நடைமுறையில் இருப்பதால் மாணவர் சேர்க்கைமுறையில் தலையிட முடியாது என்றும் தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் இது குறித்து நவம்பர் 4 ஆம் தேதி பரிசீலிக்கப்படும் என்றும் இதுபோன்ற ஒதுக்கீட்டை முதுகலைத்திட்டங்களில் செயல்படுத்தலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.
இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 317-D பிரிவின்படி ஆந்திர தெலுங்கானா மாநிலங்களில் சிறப்பு விலக்கு அந்தஸ்து கொடுக்கப்பட்டுள்ளதால் அதில் குறுக்கிட முடியாது என்றபோதிலும் இந்த சிறப்பு விலக்கு ஆணை குறித்து மாநில அரசுகள் மறுபரிசீலனை செய்து உரிய நடவடிக்கைகள் எடுக்கவேண்டும் என கூறப்பட்டுள்ளது.  மின்னம்பலம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக