வியாழன், 30 மார்ச், 2017

கலைஞரை எதிர்ப்போம் அதுதான் எங்க அரசியல் கொள்கை .. எம்ஜியாரிசம் , ஜெயாவிசம், சசியிசம், பன்னீரிசம்.. ...

நீ திமுகக்காரன் என ஒப்புகொள், சும்மா ஏன் நடிக்கின்றாய்.." என பலர் வந்து இன்பாக்ஸில் கொதிக்கின்றார்கள், கொதிப்பவர்கள் யாரென்றால் அம்மா கோஷ்டி, கொஞ்ச நேரம் பேசியாகியது
"எல்லா கட்சிக்கும் அடிப்படை கொள்கை, கோட்பாடு உண்டு, அதிமுகவின் கொள்கை என்ன?"
அது..கொள்கை.....ம்ம்ம்.. அதெல்லாம் உனக்கு எதற்கு?
சொல்லுங்கள், கொள்கை இல்லாமல் என்ன கட்சி? அதனை ஏன் நடத்தவேண்டும்? சீமானின் கட்சிக்கு கூட கொள்கை இருக்கும் பொழுது, உங்களுக்கு ஒன்று இல்லாவிட்டால் எப்படி?
ம்ம்..அப்படியா கேட்கின்றாய் திமுக என்ன கிழித்தது? அவர்கள் கொள்கை என்ன?
அவர்களுக்கு தமிழ் , தமிழ்நாடு உட்பட பல கொள்கைகள் உண்டு, ஆட்சிக்கு வருமுன்னே பேச்சு தமிழை மாற்றினார்கள், "ஸ்ரீமான்களே" அன தொடங்கிய பொதுகூட்டத்தை "பெரியோர்களே.." என மாற்றினார்கள், அபேட்சகர் என இருந்த பெயரை வேட்பாளர் என மாற்றினார்கள், ஆட்சிக்கு வந்த பின் தமிழ்நாடு என மாநிலத்தை மாற்றினார்கள், "சத்யமேவே ஜயதே.." என்பதை "வாய்மையே வெல்லும்" என தமிழ்படுத்தினார்கள்..இன்னும்......
நிறுத்து..."அபேட்சகரா" அப்படி ஒரு வார்த்தை இருந்ததா?

ஆம், இருந்தது திமுகதான் அந்த பெயரை மாற்றி வழக்கொழித்தது..
நீ ஏமாற்றுகின்றாய், அப்படி எல்லாம் இல்லவே இல்லை
சரி, திமுக தொடங்கபட்டதும், அது போராடியதும், ஆட்சிக்கு வந்ததும் முழுக்க கொள்கையின்படியே, ஆட்சியிலும் அதனை செய்தார்கள், சரி அதிமுக ஏன் உதயமானது? அதன் கொள்கை என்ன?
நன்றாக கேட்டாய், கலைஞர் என்பவர் ஊழல்வாதி, சுரண்டல் பார்ட்டி அதனை எதிர்த்து நாங்கள் கட்சி கண்ட்டோம்
அப்படியா, ஆனால் இப்பொழுது ஊழல் வழக்கில் உள்ளிருப்பது யார்?
அதெல்லாம் பேசாதே, நாங்கள் இல்லாவிட்டால் கலைஞர் தமிழகத்தை நாசமாக்கியிருப்பார்
நாசமாக்க நீங்கள் போதாதா? அவர் எதற்கு?
இல்லை இல்லை, கலைஞரை எதிர்ப்பவர்கள் நாங்கள்
ஓஹோ, கலைஞரை எதிர்க்க ஒரு கட்சியா?
ஆம், முதலில் எம்ஜிஆர், பின் அம்மா, இன்று சசிகலா என எல்லோருக்கும் கலைஞரை எதிர்ப்பதுதான் அரசியல்.
அதுதான் உங்கள் அரசியலா? உங்கள் கொள்கை, கோட்பாடு எல்லாமே அதானா?
ஆம் அதேதான்.
அதாவது கலைஞர் இல்லையென்றால் நீங்கள் இல்லவே இல்லை , அப்படித்தானே
ஆமாம்..ஏய் இல்லை இல்லை, அவர் பொல்லாத சூனியக்காரர், தீயசக்தி.
திமுக தமிழகத்தில் பதித்திருக்கும் முத்திரை பெரிது, தமிழுக்கும், தமிழர் அடையாளம் நிலைக்கவும் அது செய்திருக்கும் விஷயங்கள் சென்னை முதல் கன்னியாகுமரி வரை உண்டு, நீங்கள் என்ன செய்தீர்கள்?
நாங்கள்...ம்ம்ம்..நாங்கள்..
சொல்லுங்கள், எம்ஜிஆர் ஜெயா சமாதி எல்லாம் தமிழர் அடையாளம் அல்ல‌
அது...ஹ்ம்ம்ம்ம், நாங்கள் கலைஞரை எதிர்த்தோம், அவர் ஊழலை எதிர்த்தோம்
அவர் மேல் எந்த ஊழலை நிரூபித்தீர்கள்
ம்ம்...அது நாங்கள் இருப்பதால் அவர் ஊழல் செய்ய அஞ்சினார், இல்லாவிட்டால் நிறைய சுரண்டியிருப்பார்
அப்படியானால் அவர் ஊழல் செய்யவில்லையா?
நாங்கள் வலுவாக இருப்பதனால் பிற்காலத்தில் செய்ய முடியவில்லை.
அவரை தடுத்துவிட்டு, பெரும் ஊழலை நீங்கள் செய்துவிட்டு சிறைக்கு சென்றீர்கள் அப்படித்தானே
அது வேறு கதை, கலைஞரை எதிர்ப்போம் அதுதான் எங்கள் அரசியல்
அவர்தான் இப்பொழுது களத்தில் இல்லையே, இனி யாரை எதிர்ப்பீர்கள்??
முக ஸ்டாலினை,
இவர் இன்னும் ஆட்சிக்கே வரவில்லையே, பின் ஏன் எதிர்க்கின்றீர்கள்
அது திமுக ஊழல் கட்சி
அதாவது அது ஊழல் கட்சி என சொல்லிகொண்டே நீங்கள் ஊழல் செய்துகொண்டே இருப்பீர்கள் அப்படித்தானே
இல்லை திமுக ஊழல் கட்சி
திராட்சை தோட்டமும், சிறுதாவூர் கொடமுடி பங்களாக்கள் எல்லாம் என்ன? கலைஞரிடம் அப்படி ஒன்றும் இல்லையே
ம்ம்ம்.. திமுக ஊழல்கட்சி அதனை தடுப்போம்
நீங்கள் தடுத்தது தெரியாதா? கண்ணகி சிலை முதல் புதிய சட்டமன்ற கட்டிடம் வரை எத்தனை விஷயம் தடுத்தீர்கள்
அது..ஹிஹிஹீஹ்....ம்ம்ம்ம்
ஆக உங்களுக்கு கொள்கையோ, கோட்பாடோ ஒன்றுமே இல்லை அப்படித்தானே?
உண்டு கலைஞர் எதிர்ப்பு
அதெல்லாம் கொள்கையா? கலைஞரின் கொள்கைகளை எதிர்த்து அல்லவா அரசியல் செய்ய வேண்டும்?
ஆமாம், அப்படித்தான் இருக்க வேண்டும், தேடி பார்த்து சொல்கின்றேன்
எம்ஜிஆர் , ஜெயா சமாதிகளுக்கு கீழே சென்று தேடுங்கள், அங்கே கிடைத்தாலும் கிடைக்கும்
அதன் பின் மனிதரை காணவில்லை, தன் கட்சியின் அடிப்படை கொள்கை என்ன என தேட கிளம்பிவிட்டார் போலும், அது ஒருநாளும் கிடைக்காது, இருந்தால் தானே கிடைக்கும்..
ஆக தன் கட்சியின் கொள்கை என்ன என தெரியாதவன் எல்லாம் நீ எந்த கட்சி என அடுத்தவனை கேள்வி கேட்டு கொண்டிருக்கின்றான்..
Stanley Rajan

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக