வியாழன், 30 மார்ச், 2017

தலாக் தலாக் தலாக் விவாகரத்து வழக்கு : அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி உச்ச நீதிமன்றம் உத்தரவு

இஸ்லாமிய பெண்களை முத்தலாக் சொல்லி விவாகரத்து செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடரப்பட்ட வழக்கை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி சுப்ரீம் கோர்ட் இன்று உத்தரவிட்டுள்ளது.
புதுடெல்லி: இஸ்லாமிய வழக்கப்படி "தலாக்' என்ற வார்த்தையை பிரயோகித்து விவகாரத்து செய்து கொள்ளும் நடைமுறை காலங்காலமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இந்த முறையால் பெண்களுக்கு பாரபட்சமான நீதி வழங்கப்படுவதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இம்முறையை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் ஏற்கனவே பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இது குறித்து பதிலளிக்கும்படி, அனைத்திந்திய இஸ்லாமிய தனிநபர் சட்ட வாரியம் உள்ளிட்டோருக்கு, தலைமை நீதிபதி, டி.எஸ்.தாக்கூர் தலைமையிலான அமர்வு, 'நோட்டீஸ்' அனுப்பியது. முஸ்லிம் சமூகத்தில் மூன்று முறை "தலாக்" என கூறி விவாகரத்து செய்யும் நடைமுறையை அரசியல் சாசன விதிகளின்படி ஆய்வுக்குட்படுத்த வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு கூறியது  மாலைமலர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக