வியாழன், 2 மார்ச், 2017

சசிகலா புஸ்பா மீதான பாலியல் புகாரை வாபஸ் பெற்ற சகோதரிகளில் பானுமதியைக் காணவில்லை!

கடந்த 08.08.2016 அன்று நெல்லை மாவட்டத்தின் திசையன்விளை அருகில் உள்ள ஆனைகுடியைச் சேர்ந்த கருப்பசாமியின் மகள் பானுமதியும் அவரது அக்காவுமான ஜான்சிராணியும், தாங்கள் எம்.பி. சசிகலா புஸ்பா வீட்டில் பணிபுரிந்த போது அவர் உட்பட கணவர் லிங்கேஸ்வர திலகன், மகன் பிரதிப் ராஜா ஆகியோர் தங்களுக்குப் பாலியல் தொல்லை தந்தனர் என்றும் அதற்கு சசிகலா புஸ்பாவின் தாய் கௌரி உடந்தை என்றும் தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. அஸ்வின்கோட்னீசிடம் புகார் கொடுத்தவர்கள் நடடிக்கை எடுக்க வலியுறுத்தினர்.>அவர்களது புகாரின் அடிப்படையில் புதுக்கோட்டை மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் அன்னத்தாய் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினார். சசிகலா புஸ்பா மற்றும் தாய் கணவர், மகன் ஆகியோர் மீது ஜாமீனில் வெளியே வரமுடியாத பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதனை எதிர்த்து உச்ச நீதி மன்றத்தில் தனக்கெதிரான எப்.ஐ.ஆர்களுக்கு முன் ஜாமீன் பெற்ற சசிகலா புஸ்பா, வழக்கின் விசாரணையின் பொருட்டு புதுக்கோட்டை மகளிர் காவல் நிலையத்தில் ஆஜரானார்.


இதனிடையே சசிகலா புஸ்பாவிற்கு ஆதரவாகச் செயல்பட்ட சென்னை தொழில் அதிபர் ஹரிநாடாரும் கைது செய்யப்பட்டார்.

இந்தச் சூழலில் நேற்று ஜான்சி ராணியும், பானுமதியும், சசிகலா புஸ்பா மீது கொடுத்த பாலியல் புகாரினை வாபஸ் பெற்றுக் கொள்வதாக எஸ்.பி.அஸ்வின்கோட்னீசுக்கு மனுவை அனுப்ப அவர் விசாரணைக்காக அதனை புதுக்கோட்டை காவல் நிலையத்திற்கு அனுப்பி வைத்தார். சசிகலா புஸ்பா மீது பாலியல் புகார் குற்றச் சாட்டுக்களை கூறிய சகோதரிகள் திடீரென அதனை மறுத்து வாபஸ் பெற வந்தது அரசியல் வட்டாரத்தில் சூட்டைக் கிளப்பியுள்ளது.

இந்த நிலையில் இன்று திசையன்விளை காவல் நிலையத்திற்கு வந்த ஜான்சிராணி, தன் சகோதரி பானுமதியை 4.30 மணி முதல் காணவில்லை. யாரோ கடத்திச் சென்று விட்டார்கள் என்று புகார் கொடுத்திருக்கிறார்.

குற்றச்சாட்டு மறுப்பிற்குப் பின்பு பானுமதி கடத்தப்பட்டது பரபரப்பைக்கிளப்பிய நிலையில் நாம் வள்ளியூர் டி.எஸ்.பி.பாலஜியைத் தொடர்பு கொண்டதில் புகாரின் அடிப்படையில் பானுமதியை தேடிவருகிறோம். என்றார்.>மீண்டும் பரப்பாகியிருக்கிறார் சசிகலா புஸ்பா.
-பரமசிவன்;படங்கள் : ப.இராம்குமார் nakkeeran

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக