திங்கள், 27 மார்ச், 2017

இரட்டை இலை சின்னத்தை முழுங்கிய பாஜக ....

அதிமுகவில் இரு தரப்பும் சின்னத்துக்கு உரிமை கோரிய நிலையில், தமிழக பா.ஜ.க. தலைவர்களிடம் விவாதித்தார் அக்கட்சியின் தலைவர் அமித்சா. அவர்களோ, "தமிழக மக்களிடம் சின்னம்தான் பேசும். வேட்பாளர்களைவிட சின்னம் பார்த்து வாக்களிக்கும் மக்கள் இங்கு அதிகம். அதனால், இந்த தேர்தலில் அ.தி.மு.க.வின் இரட்டை இலையை முடக்கிவிட்டால் அ.தி.மு.க. வாக்குகளை நாம் அறுவடைசெய்ய முடியும். ஜெயலலிதாவுக்காக அ.தி.மு.க.வை ஆதரித்து வந்தவர்களில் கணிசமானவர்கள் பா.ஜ.க.வைத்தான் ஆதரிப்பார்கள். அதனால் பா.ஜ.க.வின் வளர்ச்சிக்கு சின்னம் முடக்கப்படுவது நல்லது” என்று கூறியுள்ளனர். அமித்சாவும் அதை ஆமோதித்திருக்கிறார். இதை பிரதமர் மோடியின் கவனத்துக்கும் கொண்டுசெல்ல, அங்கு பச்சை சைகை காட்டப்பட்டுள்ளது. அதையடுத்து, வெளிநாட்டுக்குச் சென்றிருந்த தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதி 21-ம் தேதி காலையில் டெல்லிக்குத் திரும்பியினார். அன்று இரவு அவருடன் அமித்சா 40 நிமிடம் பேசினார். மறுநாள் 22ஆம் தேதி சின்னம் ஒதுக்குவது குறித்த முடிவை தேர்தல் ஆணையம் எடுத்தது.நக்கேஈரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக