வெள்ளி, 31 மார்ச், 2017

புத்துயிர் பெறும் அண்ணா நூற்றாண்டு நூலகம் ... ஜெயலலிதாவின் மறைவால் சாத்தியமான அறிவு கருவூலம் ....

காழ்ப்புணர்வு அரசியலை நடத்திய ஜெயலலிதாவால், உலகத் தரம் வாய்ந்த அண்ணா நூற்றாண்டு நூலகம், எச்சில் இலைகளைக் கொட்டும் குப்பை மேடான துயர வரலாறு பலரும் அறிந்ததுதான். ஜெ மறைவுக்குப் பின், காழ்ப்புணர்வு அரசியல் மெல்ல மறைந்து வருவதையும் செம்மொழிப் பூங்கா, பறக்கும் சாலை திட்டம் ஆகியவை மீண்டும் உயிர் பெறுவதையும் காணமுடிகிறது. இந்த வரிசையில் அண்ணா நூற்றாண்டு நூலகமும் இடம்பெறும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது.

இன்று வெளியாகியுள்ள நாளேடுகளில், ‘அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் கோடை கொண்டாட்டம்’ என்கிற அரசு அறிவிப்பு வெளியாகியுள்ளது. மாணவர்களின் அறிவுத்திறனை மேம்படுத்தும் பலவகைப் பயிற்சிகள், கதை சொல்லுதல் போன்ற பொழுதுபோக்குகள், ஐ.ஏ.எஸ்-ஐ.பி.எஸ் தேர்வுக்குத் தயாராகும் மாணவர்கள் அத்துறை அதிகாரிகளடன் சந்திப்பு, பொன்மாலைப் பொழுது என்ற தலைப்பில் இலக்கிய ஆளுமைகளுடன் உரையாடல் எனப் பல நிகழ்வுகள் நடைபெற உள்ளன. விவரங்கள் வேண்டுவோர் www.annacentenarylibrary.com மற்றும் 044-22201011 ஆகியவற்றில் தொடர்பு கொள்ளலாம். காழ்ப்புணர்வு அரசியலுக்கு முடிவு கட்டும் இந்த ஆரோக்கியமான போக்கு வளரவேண்டும் என அதிகாரிகள் விரும்புகிறார்கள். பொதுமக்களின் எதிர்பார்ப்பும் அதுதான்  நக்கீரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக