சனி, 25 மார்ச், 2017

பொறுத்ததால் 400 உயிர் பறிபோனது. இன்னும் பொறுத்திருந்தால் 4 லட்சம் உயிர் பறிபோய் விடும்: அய்யாக்கண்ணு

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தென்னிந்திய நதிகள் இணைப்புக் குழு தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் 84 விவசாயிகள் கடந்த 11 நாட்களாக தலைநகர் டெல்லியில் போராடி வருகிறார்கள். இதுகுறித்து அய்யாக்கண்ணு கூறியதாவது:– தமிழகத்தில் நிலவும் கடும் வறட்சியால் விவசாயம் பாதிக்கப்பட்டு, நெற் பயிர்கள் கருகியதை கண்டு 400 விவசாயிகள் துயரத்திலும், மனவேதனையிலும் மாண்டு போய் உள்ளனர். ஆனால் தமிழகத்தில் போராடினால் மத்திய அரசு கண்டுகொள்வதில்லை என்பதால், தலைநகர் டெல்லியில் கடந்த 11 நாட்களாக போராடி வருகிறோம். நிதி மந்திரி அருண் ஜெட்லி கடந்த ஆண்டு கூறியதை போன்று, தற்போதும் பொறுத்திருங்கள் நடவடிக்கை எடுப்போம் என்று கூறுகிறார். ஓராண்டு பொறுத்து இருந்ததால் 400 விவசாயிகளுடைய உயிர் பறிபோய் இருக்கிறது. இன்னும் பொறுத்து இருந்தால் அடுத்த ஆண்டுக்குள் 4 லட்சம் விவசாயிகளுடைய உயிர் பறிபோய் விடும். மத்திய அரசு எங்களுடைய நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை இங்கிருந்து (டெல்லி) நகர மாட்டோம். மத்திய அரசு நடவடிக்கை எடுக்க முடியாது என்று பிடிவாதம் பிடித்தால், நாங்கள் ஒவ்வொரு விவசாயியும் வி‌ஷம் குடித்து தற்கொலை செய்துகொள்வோம். இதை தவிர வேறு வழி இல்லை.  nakkeeran

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக