செவ்வாய், 21 பிப்ரவரி, 2017

பாவனாவிற்கு நடந்தது .. நடிகர் லால்


அவர் அதிர்ச்சியிலிருந்து இன்னும் மீளவில்லை”: மலையாள நடிகர் லால் பேட்டி. காரில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்ட மலையாள நடிகை,இன்னும் அந்த சம்பவத்திலிருந்து மீண்டு வரவில்லை என நடிகர் லால் தெரிவித்துள்ளார். இது பாலியல் துன்புறுத்தல் என்கிற எளிமையான வார்த்தைகளால் நீதியை குழி தோண்டி புதைத்து விடாதீர்கள்.இது கற்பழிப்பு. மிக மோசமான கற்பழிப்பு. இன்னும் எத்தனை நிர்பயாக்கள் சீரழிக்கப்படப் போகிறார்கள்? இந்த காமுகர்களுக்கு சரியான தண்டனை, கடுமையான தண்டனை கொடுத்தால் மட்டுமே இவர்கள் திருந்துவார்கள் என்று ஆவேசப்படுகிறார் நடிகர் லால். இது குறித்து மலையாள ஊடகங்களுக்கு நடிகரும்,இயக்குநருமான லால் அளித்துள்ள பேட்டியில்,”சம்பவம் நடந்த அன்று அருகிலிருந்த எனது வீட்டுக்கு வந்து,தனக்கு நேர்ந்த கொடுமைகளை அந்த நடிகை கூறி கதறினார். நான் அதிர்ச்சியில் உறைந்து போனேன். சிறிதும் தாமதிக்காமல் உடனடியாக,கேரள டி.ஜி.பியை தொடர்பு கொண்டு,நடந்த சம்பவங்களை விளக்கினேன்.இதனைத் தொடர்ந்து உடனடியாக காவல்துறையினர் இந்த சம்பவம் குறித்த விசாரணையில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தை லேசில் விட்டு விட மாட்டோம் என்கிறார். விழி பிதுங்கும் கேரளா அரசு. லைவ்டே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக