புதன், 22 பிப்ரவரி, 2017

அமைச்சருக்கு எதிரான செயலால் கைது நடவடிக்கை - கமல்ஹாசன் ஆவேசம்

ஜல்லிக்கட்டுக்கு நிரந்தர சட்டம் கோரி தமிழகம் முழுவதும் போராட்டம் நடைப்பெற்றது. அப்போது மத்திய அரசு கொண்டு வந்த அவசர சட்டத்தை ஏற்று தமிழக அரசு பல்வேறு இடங்களில் ஜல்லிக்கட்டை துவங்கி வைக்க முற்பட்டது. புதுக்கோட்டையில் அமைச்சர் விஜயபாஸ்கர் தலைமையில் ஜல்லிக்கட்டு நடைபெற்றது.   நிரந்தர சட்டம் இயற்றும் வரை ஜல்லிக்கட்டு நடத்தக்கூடாது என்று புதுக்கோட்டையில் கமல்ஹாசன் நற்பணி இயக்க பொறுப்பாளர் சுதாகர் உள்ளிட்டவர்கள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தினர்.  இந்த சம்பவத்தால் அமைச்சர் தரப்பினர் அதிருப்தியில் இருந்தனர்.<இந்நிலையில், கடந்த 18ம் தேதி எடப்பாடி பழனிச்சாமி அரசு அமைந்ததை ஏற்கமுடியாமல் உள்ள மன உளச்சலை ஆளுநருக்கு மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்துங்கள் என்கிற அர்த்தத்தில் கமல்ஹாசல் டுவிட்டரில் பதிவிட்டார்.
இதையடுத்து ஆளுநருக்கு மின்னஞ்சல் அனுப்புவதற்காக புதுக்கோட்டையில் தனது தலைமையில் ஆயிரம் பேரை திரட்டிக்கொண்டிருந்தார் சுதாகர்.  இதை அறிந்த போலீசார் சுதாகர் உள்ளிட்ட  5 பேரை  நேற்று முன் தினம்  கைது செய்யப்பட்டனர்.  நேற்று முழுவதும் விசாரணை நடத்தி இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

இந்த வழக்கில் வழக்கறிஞர் அழகர் சுதாகர் தரப்பினருக்காக ஆஜராகியுள்ளார்.  நாளை 5 பேரையும் ஜாமீனில் விடுதலை செய்ய வைத்துவிடுவேன் என்கிறார் அழகர்.>இந்த கைது நடவடிக்கையினால் ஆவேசமான கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் ன்று பதிவிட்டுள்ளார். nakkeeran

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக