செவ்வாய், 21 பிப்ரவரி, 2017

உபி.. முஸ்லிம் ஓட்டுக்களை பிரிப்பதில் சமாஜ்வாதி - பகுஜன் சமாஜ் இடையில் கடும் போட்டி!

பாஜக அறுதி பெரும்பான்மை கனவில் மிதப்பதாக வெளியே கூறிகொண்டாலும் நிலைமை அப்படி அல்ல .  தலித் ஓட்டுக்களை சமாஜ்வாதி + காங்கிரஸ் கூட்டணி  பெறுவது இலகுவான காரியம் அல்ல. அவை மாயாவதியின் சொந்த  சொத்து   . இஸ்லாமியர்களின் ஓட்டுக்கள்தான் மாயாவதிக்கும் அகிலேஷுக்கும் உள்ள வெற்றி  மாங்கனி . அதை பறிப்பதில் எவருக்கு வெற்றியோ அவரே அடுத்த  முதலவர் என்று பலரும் நம்புகின்றனர்
தலித்துகளுக்கு எதிரானவர் பிரதமர் நரேந்திர மோடி என பகுஜன் சமாஜ் கட்சித்தலைவர் மாயாவதி குற்றஞ்சாட்டியுள்ளார்.
உத்தரபிரதேச மாநிலம் ஓராய் நகரில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு பேசியபோது, பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதியை, கடுமையாகத் தாக்கிப் பேசினார்.
இதற்குப் பதிலடியாக பிரதமர் மோடி தலித்துகளுக்கு எதிரான மனிதர் என பகுஜன் சமாஜ் கட்சித்தலைவர் மாயாவதி குற்றஞ்சாட்டியுள்ளார். உத்தரப்பிரதேச மாநிலம் சுல்தான்பூர் மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற பொதுக்கூட்டமொன்றில் பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி கலந்து கொண்டு பேசியபோது கூறியதாவது,

பிரதமர் மோடி தலித்துகளுக்கு எதிரான மனிதர். பகுஜன் சமாஜ் கட்சி முதலில் ஒரு இயக்கம், பின்னர் தான் அது கட்சி. திருமணமே செய்து கொள்ளாமல் சிறுபான்மையினர் நலனுக்காக குறிப்பாக முஸ்லீம்கள் நலனுக்காக நான் உழைத்து வருகிறேன். சிறுபான்மையினர் மற்றும் பின்தங்கிய மக்கள் தங்களது மிகப்பெரிய சொத்தாக என்னைக் கருதுகின்றனர். பகுஜன் சமாஜ் கட்சியை பேகன்ஜி சமாஜ் கட்சி என்று கூறிய பிரதமர் மோடியை உத்தரப் பிரதேச மக்கள் இந்தத் தேர்தலில் பழிக்குப்பழி வாங்குவார்கள் என்று அவர் பேசினார். மின்னம்பலம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக