செவ்வாய், 21 பிப்ரவரி, 2017

உபி கருத்து கணிப்பு .. பாஜக - சமாஜ்வாதி காங்கிரஸ் கூட்டணி சம நிலையில் ! மாயாவதிதான் கிங் மேக்கர்?

உத்தர பிரதேச சட்டசபை தேர்தல் கருத்து கணிப்புகள் ஒரு ஒப்பீடு
India Today-AxisJan 31, 2017180-191168-17839-431–4
Times Now-VMRJan 31, 2017202147477
ABP News-LoknitiJan 30, 2017118-128187-19776-86-
VDPAssociatesJan 29, 201720712858-
THE WEEK-Hansa ResearchJan 27th, 2017192-196178-18220-245-9

உத்தரபிரதேசத்தில் அகிலேஷ் மீண்டும் அமைக்கும் ஆட்சியில் நிச்சயம் சிவபாலுக்கு அமைச்சர் பதவி வழங்கப்படும் என முலாயம் தெரிவித்துள்ளார். உத்தரப்பிரதேசத்தில் சட்டப்பேரவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. அங்கு ஆளும் சமாஜ்வாடி கட்சி, காங்கிரசுடன் கூட்டணி சேர்ந்து மீண்டும் ஆட்சியைப் பிடிக்க தீவிரம் காட்டி வருகிறது. பாஜ, பகுஜன் சமாஜ் கட்சிகளும் ஆட்சியைப் பிடிக்க போராடுவதால் கடும் போட்டி நிலவி வருகிறது. யார் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க போகிறார்கள் என்பது கணிப்புகளில் தெளிவாகத் தெரியவில்லை. இருந்த போதிலும் அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் தங்களது கட்சிதான் ஆட்சியில் அமரும் என பேசி வருகின்றனர். இதற்கிடையே, சமாஜ்வாடி கட்சியில் பிளவு ஏற்பட்டு கட்சியை தந்தை முலாயமிடம் இருந்து அகிலேஷ் கைப்பற்றினார்.

எனினும், தனக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய தனது சித்தப்பா சிவபால் யாதவுக்கு தேர்தலில் சீட் கொடுத்துள்ளார். தற்போது காங்கிரசுடன் கூட்டணி அமைத்து ராகுலுடன் இணைந்து அகிலேஷ் பிரசாரம் செய்து வருகிறார். இந்நிலையில், சமாஜ்வாடி தலைவர் முலாயம் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘இந்த தேர்தலில் பெரும்பான்மையுடன் சமாஜ்வாடி மீண்டும் ஆட்சியை கைப்பற்றும். அகிலேஷ் முதல்வராக பொறுப்பேற்பார். அவரது அரசில் சிவபால் யாதவ் நிச்சயம் அமைச்சராக நியமிக்கப்படுவார். சில தொண்டர்களால்தான் கட்சியில் சிறிய சலசலப்பு ஏற்பட்டுள்ளது. அதைத்தவிர கட்சிக்குள் எந்தப் பிளவும் இல்லை என்றார். அகிலேஷ் மீது கோபம் தணியாமல், தேர்தல் முடிவு வெளியானதும், புதிய கட்சித் தொடங்குவது குறித்து அறிவிப்பேன் என சிவபால் யாதவ் ஏற்கனவே கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.  மின்னம்பலம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக