வியாழன், 16 பிப்ரவரி, 2017

எடப்பாடிக்கு கவர்னர் அழைப்பு... இது மூன்றாவது அழைப்பு .

சென்னை: அ.தி.மு.க., சட்டசபை குழு தலைவராக தேர்வு செய்யப்பட்ட எடப்பாடி பழனிச்சாமி காலை 11.30 மணிக்கு கவர்னர் வித்யாசாகர் ராவை சந்திக்க உள்ளார். இதற்காக கவர்னர் நேரம் ஒதுக்கியுள்ளார். கவர்னரை, எடப்பாடி உள்ளிட்ட 5 பேர் சந்திக்க உள்ளனர் . ஏற்கனவே இரண்டு முறை கவர்னரை எடப்பாடி சந்தித்துள்ள நிலையில், மீண்டும் இன்று சந்திப்பு நடைபெற உள்ளது. ஆட்சி அமைக்க அழைப்பு விடுப்பாரா என்பது கணிக்க முடியாததாக இருக்கிறது.  தினமலர் பினாமி சொத்து கேள்விப்பட்டு இருக்கிறோம், பினாமி பிரதமர் பார்த்து இருக்கிறோம் இப்போது பினாமி முதல்வரையும் பார்க்கப்போகிறோம் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக