புதன், 22 பிப்ரவரி, 2017

வசந்தசேனையின் ஆட்டம் ஆரம்பம்! எல்லாரையும் தூக்கி வீசுங்கள் ... சிறையில் இருந்து பறந்து வரும் கட்டளைகள்

ஒன்றுமே தெரியாதவர் என்று எல்லாரும் சசிகலாவை தவறாக எடை போட்டுவிட்டார்களோ என்று எண்ணத்தோன்றுகிறது. ஆனால் அவரது ஒவ்வொரு மூவையும் வைத்துப்பார்க்கும்போது அவர் தெளிவான அரசியல் பயணம் மேற்கொண்டு வருகிறார். அதாவது கைதேர்ந்த அரசியல்வாதியாக உள்ளார். கூவத்தூரில் எம்எல்ஏக்களை அடைத்து வைத்தது முதல் எடப்பாடி பழனிச்சாமி முதல்வர் ஆனது வரை ஒரு ப்ளாஷ்பேக் காட்சி வைத்து பாருங்கள் நன்றாக புரியும். இன்னும் சசிகலாவின் அடுத்தகட்ட நகர்வை பாருங்கள். நேற்று தினகரன்,டாக்டர் வெங்கடேஷ் மற்றும் விவேக் ஆகியோர் பரப்பன அக்ரஹாரா சிறைக்கு சென்றனர். அங்கு சசிகலாவுடன் நீண்ட ஆலோசனை நடத்தப்பட்டது. ஆலோசனையில் சசிகலாவின் அத்தனை உத்தரவுகளுக்கும் அனைவரும் தலையாட்டியதோடு சரி. தினகரன் மட்டும் நம்பிக்கை வாக்கெடுப்பு முதல் பதவியேற்றது வரை விரிவாக கூறியிருக்கிறார்.
இதில் பன்னீர்செல்வம் பற்றிய டாபிக் ஹைலைட். பன்னீர் செல்வத்திற்கு உதவிய மாவட்ட செயலாளர்கள்,கிளை செயலாளர்கள் என ஒருவரையும் விட்டு வைக்க வேண்டாம். எல்லாரையும் தூக்கி எறியுங்கள். அதேபோல நிர்வாகிகளையும் விட்டு வைக்காதீர்கள். அவர்களுக்கு கையெழுத்து இல்லாமல் நீக்கம் குறித்த கடிதத்தை அனுப்ப வேண்டாம். துணை பொது செயலர் அல்லது அவைத்தலைவர் கையெழுத்துபோட சட்ட நிபுணர்களை ஆலோசித்து முடிவெடுங்கள் என்று தெளிவாக கூறியிருக்கிறார். அதோடு பன்னீருக்கு உதவி செய்த அரசு தரப்பு அதிகாரிகள்,போலீஸ் அதிகாரிகள் என யாரையும் நம் அருகில் வைக்க வேண்டாம். எல்லாரையும் தூக்கி அடியுங்கள் என்று ஆவேசமாக கூறியுள்ளார். அதன்படி முதலில் அரசு அதிகாரிகளை மாற்றம் செய்துவிட்டு, பின்னர் கட்சி நிர்வாகிகளுக்கு கல்தா கொடுக்க திட்டம் தயாராகிவிட்டது. பார்த்தால் பதுமையாக இருந்த சசிகலாவின் அரசியல் வியூகத்தை பார்த்தீர்களா? இவரா ஒன்றும் தெரியாதவர்? ஜெயலலிதாவின் கேப்மாரி பாசறையில் படித்து மாபியா குயின்  பட்டம் பெற்ற பட்டதாரி  லைவ்டே


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக