புதன், 22 பிப்ரவரி, 2017

கோவையில் ஐந்தடுக்கு பாதுகாப்பு .. இஷா யோகா நிகழ்ச்சி .. பிரதமர் மோடி நாளை மறுநாள்!

கோவை ஈஷா யோக மைய நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி நாளை மறுதினம் வருகிறார். இதையடுத்து வனப்பகுதியில் மவோயிஸ்ட் நடமாட்டத்தை தடுக்க அதிரடிப்படை குவிக்கப்பட்டுள்ளது. கோவை மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள ஈஷா யோகா மையத்தில் 112 அடி உயர ஆதியோகி சிலை நிறுவப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா வரும் 24ம்தேதி மாலை 5 மணிக்கு நடக்கிறது. இவ்விழாவில், பிரதமர் நரேந்திரமோடி பங்கேற்கிறார். விழா நடைபெறும் இடம் மேற்குதொடர்ச்சி மலையை ஒட்டியுள்ளதால், மாவோயிஸ்ட், நக்சல் நடமாட்டம் இருக்கும் என பாதுகாப்பு படையினர் கருதுகின்றனர். இதை தடுக்க, 100க்கும் மேற்பட்ட அதிரடிப்படை வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். 24 மணி நேரமும் கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. விழா நடக்கும் பகுதி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் 250 கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது. 25 தீயணைப்பு படை வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. பிரதமர் வருகையையொட்டி கோவை ஈஷா யோகா மையத்தில் ஐந்தடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பிரதமரின் பாதுகாப்பு படைப்பிரிவை சேர்ந்த அதிகாரிகள் 21 பேர் நேற்று காலை கோவை வந்தனர். ஈஷா யோகா மையத்திற்கு சென்று பாதுகாப்பு பணிகளை ஆய்வு செய்தனர்  நக்கீரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக