வெள்ளி, 3 பிப்ரவரி, 2017

நந்தினி கொலை... இந்து முன்னணி மணிகண்டன் குண்டர் சட்டத்தில் கைது


அரியலூர்: தலித் சிறுமி நந்தினி கொலை வழக்கில் தொடர்புடையைதாக கைது செய்யப்பட்டுள்ள மணிகண்டன் மீது குண்டர் சட்டம் போடப்பட்டுள்ளது.
கடந்த டிசம்பர் 29-ஆம் தேதி, அரியலூர் மாவட்டம், சிறுகடம்பூர் கிராமத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் மகள் நந்தினி (17), ஆதிக்க சமூகத்தினரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கிணற்றில் சடலமாகக் கிடந்தார். இரும்புலிக்குறிச்சி போலீஸார் வழக்குப்பதிந்து இந்து முன்னணி ஒன்றியச் செயலர் மணிகண்டன், அவரது நண்பர் மணிவண்ணன் உள்ளிட்ட 4 பேரைப் போலீஸார் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்நிலையில், இந்த கொலை வழக்கில் முதல் குற்றவாளியான இந்து முன்னணி ஒன்றியச் செயலர் மணிகண்டனை குண்டர் சட்டத்தில் கைது செய்ய அரியலூர் மாவட்ட ஆட்சியர் சரவண வேல்ராஜ் உத்தரவிட்டுள்ளார்.
இதையடுத்து மணிகண்டன் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. இதையடுத்து இன்னும் ஒரு ஆண்டுக்கு மணிகண்டனால் ஜாமீனில் கூட வெளியே வர முடியாது. தினமணி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக