புதன், 8 பிப்ரவரி, 2017

தமிழக ஆட்சி அதிகாரம் பாஜகவின் கைப்பாவைகளின் கையில்தான் இருக்கிறது? இருக்கும்?

mathavara முதலமைச்சராக இருந்தால் சசிகலாவும் சரி, பன்னீர் செல்வமும் சரி, பாஜகவின் கைப்பாவைகளாய்த்தான் இருவருமே இருக்கப் போகிறார்கள். அதற்கான தளங்கள் சேகர் ரெட்டி விவகாரத்தில் அமைக்கப்பட்டுவிட்டன.
பன்னீர்செல்வத்தின் தோற்றம், எளிமை, நிதானம், காட்டும் பணிவு, எல்லாம் மக்களிடம் நெருக்கமாக உணரவைக்கக் கூடியது. (உண்மையையும், நேர்மையையும் நிச்சயம் இங்கு குறிப்பிட முடியாது) /> சசிகலாவின் அப்பட்டமான ஜெயலலிதா மேக்கப், நிழல் பின்னணி, அதிகாரத்திற்கான அவசரம், ஜெயலலிதாவுக்கே அவரால்தான் ஊழல் கறை படிந்தது போன்ற தகவல்கள், மீண்டும் காலில் விழும் அசிங்கங்கள் தலைதூக்கும் என்னும் அச்சம் எல்லாம் மக்களிடம் இருந்து விலக்கி வைக்கக் கூடியது./ யாருடைய அதிகாரத்தின் மூலம் தமிழக மக்களை நெருங்குவதும் தமிழகத்தை ஆக்கிரமிப்பதும் தங்களுக்கு சாதகமாக இருக்கும் என பாஜக மிகத் தெளிவான ஸ்கெட்ச் போட்டிருக்கிறது.  முகநூல் பதிவு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக