புதன், 8 பிப்ரவரி, 2017

இங்கே யாரும் சுத்தம் இல்லையே? ஜெயா? சசி ? பன்னீர் ? நேற்று வரை ஒன்றாக கொள்ளை .. மாபியாக்களில் இதுபோன்ற குத்து வெட்டுக்கள் சகஜம்!

OPS அவர்களை புரட்சியாளர் அளவுக்கு ஜாக்கி வைத்து தூக்கி புகழுவதை பார்க்கும் போது சிரிப்புதான் வருகிறது. சசிகலா முதல்வராக வருவதில் இவர்களுக்கு பிடிக்கலையாம். காரணம் சசிகலா ஊழல் பேர்வழியாம். அதனால் OPSஸை ஆதரிக்கிறார்களாமாம்!
சரி.. ஜெயாவும் சசியும் ஊழல் செய்யும் போது, "மக்கள் பணத்தில் ஊழல் செய்கிறீர்கள் இது தவறு" என்று உட்கட்சியில் போராட்டம் செய்து அரசியல் சீற்றம் கொண்டாரா பன்னீர்?
டாஸ்மாக் திறந்து பெண்களின் தாலி அறுத்து அவர்கள் கண்ணீர் சிந்தும் போது, பெண்களின் நிலை கண்டு கண்ணை மூடி தன் நிலை எண்ணி வருந்தி இதே போல் தியானம் செய்தாரா? OPS மீது ஊழல் குற்றச்சாட்டு இல்லையா? முதல்வராக இருந்த சிறு காலத்தில் அவரது தம்பி ஊழல் செய்து கொலை செய்த வழக்கு இல்லையா? (மணல் கொள்ளை மிகப் பெரிய அளவில் நடுத்துபவர்கள் இவரின் சகாக்கள் தானே)
சசிகலா ஜெயாவை நெருங்க விடுவதில்லையாம். ஜெயாவை காண்பவர்களை வடிகட்டும் வடிகட்டியாக அதிமுகவில் நால்வர் அணி இருந்தது. அந்த நால்வர் அணியில் ஒருவராக, அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களைக் கூட நெருங்க முடியாத அளவுக்கு OPS தடுக்க வில்லையா? சாந்த சொரூபியாம் பன்னீர்.. ஜல்லிக்கட்டு முடியும் தருவாயில் சென்னை வாழ் மக்களை காவல்துறையை ஏவிவிட்டு நாசம் செய்தாரே இவரா சாந்தக்காரர் ?

தொடர்ச்சியாக ஆணவகொலைகள் தமிழகத்தில் நிகழ்த்தபட்டபோது, அதற்காக தனிச்சட்டம் கொண்டுவரவேண்டும் என்ற கோரிக்கை எழுந்த போது, தமிழகத்தில் சாதி கொலைகள் நடக்கவே இல்லை என்று அடித்து பேசி தனிச்சட்டத்தை மறுத்தவர் அன்றும் முதல்வராக இருந்த இதே பன்னீர்.. இவரா சாந்தக்காரர்? இன்னும் எத்தனை நாட்களாய் தீபா வரனும்.. ஓபிஎஸ் வரணும்னு ஏமாற போகிறோம்..
ஜெயா. சசி. ஓபிஎஸ் - இது ஊழல் கூட்டணி. (ஜெயா.. நல்லவர். சசியால் கெட்டுப்போனார் என்ற கட்டுக்கதை போல் ஓபிஎஸ் நல்லவர் என்பதும் கட்டுக்கதை) ஒரு ஊழல் கட்சி தமிழ்நாட்டை ஆளும் போது தலைவர் இறந்து விட்டார். அந்த ஊழலில திளைக்கவும், அதிகாரத்தை கைப்பற்றவும் கூட்டாளிகளுக்குள் கூப்பாடு. எப்போது பேசாத ஓபிஎஸ் இப்போது பேசுவதன் காரணம் பா.ஜ.க ஆதரவு. அவ்வளவு தான்.
இதை புரியாமல் ஓபிஎஸ் சாந்த சொரூபி மாதிரியும்.. அமைதி புரட்சியாளர் போன்ற பிம்பங்கள் முரண்பாடானது. 'வாழும் காமராஜர்'னு சொல்லாதவரையில் நமக்கு ஆறுதல்!
உண்மையில் மக்கள் பணத்தை கொள்ளையடித்து வளர்த்த இந்த கூட்டத்தின் மீதே நமக்கு கோபம் வரவேண்டும். மக்கள் போட்ட ஓட்டை வைத்து கொண்டு இன்றைக்கு இவர் முதல்வர் நாளைக்கு அவர் முதல்வர் என்று இவர்கள் ஆடும் ஆட்டத்தை பார்த்து வெட்கப்பட வேண்டும்.. வேதனைப்படவேண்டும்
ஆனால் OPS பேசிட்டார்.. சசிகலா திட்டிட்டார்.. OPS பதிலடி கொடுத்தார் என்று பேசுகிறோம்.. சிரிக்கிறோம்.. சுய ஆனந்தம் அடைகிறோம் !
@வேந்தன்
Prakash JP முகநூல் பதிவு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக