புதன், 8 பிப்ரவரி, 2017

சசிகலா திவாகரன் மீது வழக்கு ... பன்னீரை மிரட்டி ராஜினமா வாங்கிய குற்றம்!

.சசிகலா கும்பல் பணம் கொடுத்து பணிய வைக்க முயற்சிக்கும். தடுத்தால் மிரட்டும். மீறினால் ஆளையே காலி செய்யும், துணிச்சல் உள்ளவர்கள் என்பது ஊர் அறிந்த உண்மை. சமீபத்தில் 2 எம்எல்ஏக்கள் பன்னீருக்கு ஆதரவாக அவரது வீட்டுக்கு வந்து விட்டனா். இதுபோலத் தான் அனைவரின் மன நிலையும் உள்ளது. ஆனால், அவர்கள் அனைவரும் சிறை வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கவர்னா் தற்போது சென்னை வருவதாக தெரியவில்லை. அவா் சுப்ரீம் கோர்ட்டில் தீர்ப்பு வந்தவுடன்தான் சென்னை திரும்பலாம் என்று கூட கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று இரவு முதல்வர் பன்னீர் பேட்டி அளித்தார்.
அந்த பேட்டியில் தன்னை மிரட்டித் தான் ராஜினாமா கடிதம் பெற்றனர் என்றார். இதனையடுத்து இது சென்னை உயா் நீதி மன்றத்தில் இன்று வழக்காக தொடுக்க பல வக்கீல்கள் முயன்று வருவதாக கூறிவருகின்றனா். கவர்னா், பன்னீர்செல்வத்திடம் பேக்ஸ் மூலம் புகார் பெற்று சசிகலா,திவாகரன் ஆகியோர் மீது வழக்கு பதிய இருப்பதாக கூறப்படுகிறது. தற்போது அரசியல் ஆட்டம் துவங்கியுள்ளது. இதில் அடிப்படபோவது சசிகலாதான் என்று அரசியல் பார்வையாளா்கள் தெரிவித்து வருகின்றனர் .. லைவ்டே 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக