முதல் அமைச்சர் ஒ.பன்னீர்செல்வம் இன்று காலை சென்னையில் உள்ள தனது அரசு இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.
சசிகலாவின் குற்றச்சாட்டுக்கள் குறித்து விளக்கம் அளித்தார். அப்போது ஜெ.வுக்கு மருத்துவமனையில் என்னதான் நடந்தது என்று கூறமுடியுமா என செய்தியாளர் ஒருவர் கேட்டார்.
அதற்கு பதில் அளித்த ஒ.பன்னீர்செல்வம், மறைந்த முதல் அமைச்சர் ஜெயலலிதா உடல்நிலை குறித்து பரவலாக கேள்விகள் உள்ளன. இது குறித்து உச்சநீதிமன்றத்தில் தற்போது பணியில் உள்ள நீதிபதி ஒருவரின் தலைமையில் விசாரணை ஆணையம் அமைத்து உலகத்திற்கு உண்மைகள் வெளிக்கொண்டுவரப்படும் என்றார். malaimalar
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக