வியாழன், 9 பிப்ரவரி, 2017

சு சாமி :கட்டாயப்படுத்தினாங்கன்னு சொல்ல பன்னீர் என்ன சின்ன குழந்தையா? ராஜினாமாவை வாபஸ் வாங்க முடியும்! அதனால்தால் சசியின் கூலி துள்ளுகிறார்?

கட்டாயப்படுத்தியதால் ராஜினாமா செய்தேன் என்று சொல்வதற்கு பன்னீர் செல்வம் என்ன சின்ன குழந்தையா என்று பா.ஜ.க. மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி: தமிழக முதல் அமைச்சராக சசிகலா பதவியேற்க வேண்டும் என்று பாஜக மூத்த தலைவரும் எம்.பியுமான சுப்ரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தி நிறுவனம் ஒன்றிற்கு சுப்ரமணியன் சுவாமி அளித்த பேட்டியில், “ தற்போதைய சூழல் தெளிவாக உள்ளது. தமிழக முதல் அமைச்சராக சசிகலா பதவியேற்க வேண்டும். தாமதமானால் சட்டத்திற்கு புறம்பாகிவிடும். இந்த பிரச்சினையில் ஜனாதிபதி தலையிட வேண்டும்” என்று தெரிவித்து இருந்தார். மேலும், “தமிழக ஆளுநராக பொறுப்பு வகித்து வரும் ராவ் மும்பையில் ஒளிந்து கொண்டிருக்கிறார். மும்பையில் அமர்ந்து கொண்டு என்ன செய்கிறார்? ஆளுநர் தமது பணியில் தவறிவிட்டார். தனது ஆளுநர் நிலைமையை புறக்கணித்துவிட்டார். தமிழக ஆளுநருக்கு எதிராக மத்திய அமைச்சரவையில் தீர்மானம் கொண்டு வர வேண்டும்” என்று கூறினார்.
கட்டாயப்படுத்தி ராஜினாமா செய்த வைத்தார்கள் என்ற பன்னீர் செல்வத்தின் குற்றச்சாட்டு குறித்த கேள்விக்கு பதிலளித்த சுவாமி, “பன்னீர் செல்வம் ஒரு குழந்தையா? அவர் ஒரு முதலமைச்சர். ஒரு பெண், அதுவும் முதல்வராக கூட இல்லாதவர் அவருக்கு அழுத்தம் கொடுத்தாரா? இதுபோன்ற விஷயங்கள் பேசப்பட்டு வருவது ஆச்சர்யமளிக்கிறது. பன்னீர் செல்வம் படங்களை பார்ப்பதை நிறுத்திவிட்டு, சட்டப்படி கொடுக்கப்பட்ட ராஜினாமாவை திரும்ப பெற முடியாது என்பதை படிக்க வேண்டும்.” என்றார். மாலைமலர்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக