வியாழன், 9 பிப்ரவரி, 2017

இந்த வெறிநாய்கள் எங்கிருந்து உருவாகிறார்கள்..?? குழந்தைகளை பாலின பேதத்துடன் பார்க்கும் குற்றவாளி சமுகம்

Image may contain: 1 person, selfie, beard, closeup and indoorDhamayanthi Tamilmozhi". மாங்காடு அடுத்த மதனந்தபுரத்தில் கானாமல் போன சிறுமி ஹாசினியை தஷ்வந்த் என்ற வெறிநாய் தனது வீட்டிற்கு அழைத்து பாலியல் பலாத்காரம் செய்து தலையணை வைத்து அழுத்தி கொலை செய்து உடலை ஒரு டிராவல் பையில் போட்டு தாம்ரபரம் - மதுரவாயல் செல்லும் பைபாசின் சாலையோரம் வைத்து பெட்ரோல் ஊற்றி எரித்துள்ளான்.
2. தெருவில் பழைய காகிதம் பொறுக்கி அதை விற்பனை செய்துவந்த 14 வயது சிறுமி சாந்தி ( பெயர் மாற்றப்பட்டுள்ளது )
இந்த வேலையை விட்டுவிட்டு ஒரு பூக்கடையில் வேலைக்கு சேர்ந்திருக்கிறார் அங்கு அந்த சிறுமியை அந்த பூக்கடைக்காரன் அவனது கூட்டாளிகள் இருவருடன் இணைந்து வன்புணர்வு செய்துள்ளனர்.கூட்டாளிகளில் இருவர் பேரப்பிள்ளைகளை எடுத்தவர்கள் தற்போது அவர் கர்ப்பிணி. இது ஒரு மருத்துவர் மூலம் வெளிவந்துள்ளது. சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
3. அரியலூர் நந்தினி, வன்புணர்வு செய்யப்பட்டு கொலை, வயிற்றிலுள்ள குழந்தை கொடூரமாக வயிற்றிலிருந்து எடுத்து எரித்து கொலை.

இந்த சிறுமிகள் செய்த தவறு என்ன..? பெண்ணாய் பிறந்ததா..??
பெண்கள் மீதான வன்முறைகள், பாலியல் வன்புணர்வு, ஆசிட் வீச்சு, கொலை, இதற்கெல்லாம் பாதிக்கப்பட்ட பெண்களையே குற்றவாளியாக்கி வக்காலத்து வாங்கும் யாராயிருந்தாலும் இப்ப லைன் கட்டி வாங்க....
இந்த சிறுமிகள் ஆபாசமாக உடை உடுத்தினார்களா? ,ஆடம்பரமாக திரிந்தார்களா?
காமவெறி கொண்ட வக்கிர நாய்களே...!! உங்களுக்கு பச்சைக் குழந்தையோ, பல் விழுந்த பாட்டியோ.. எல்லாம் ஒன்று தானா... பெண் என்றால் அவளிடம் உள்ள அந்த ஒட்டை மட்டும் தான் கண்ணுக்குத் தெரியுமா,? நீங்களும் அந்த ஓட்டை வழியாகத்தானே இந்த உலகத்தில் வந்தீர்கள்...!!!
ஜல்லிக்கட்டு பிரச்சனை, அசாதாரண சுயநல அரசியல் சூழ்நிலை இவற்றின் பின்னால் இந்த சம்பவங்கள் ஊற்றி மூடப்பட்டோ, அல்லது மறக்கடிக்கப்பட்டோ, மறைக்கப்பட்டோ போகலாம். ஆனால் நாம் வாளாவிருக்க மாட்டோம்.
ஆனால் இதற்கெல்லாம் யாரை குற்றவாளியாக்குவது...??? அந்த வெறியாய்களையா...? இந்த வெறிநாய்கள் எங்கிருந்து உருவாகிறார்கள்..?? குழந்தைகளை பாலின பேதத்துடன் பார்க்கும், வளர்க்கும் இந்த சமூகமே முழு முதன்மையான குற்றவாளி....!
Dhamayanthi Tamilmozhi

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக