செவ்வாய், 14 பிப்ரவரி, 2017

பன்னீர்செல்வம் :எம்எல்ஏக்களை ரிசார்ட்டுக்கு வெளியே விட்டால் எனக்கே ஆதரவு அளிப்பார்கள் !

கூவத்தூர் கோல்டன் பே ரெசார்ட்டில் அடைத்து வைக்கப்பட்டுள்ள அதிமுக எம்எல்ஏக்களுடன் சசிகலா தீவிர ஆலோசனை மேற்கொண்டார். ஆலோசனையின் முடிவில் அதிமுக சட்டமன்ற குழு தலைவராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டார். இதனை எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட அமைச்சர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்தனர். ஆட்சி அமைக்க உரிமை கோரி ஆளுநருக்கு கடிதம் அனுப்பியுள்ளோம் என்றார் எடப்பாடி பழனிச்சாமி. ஆனால், எத்தனை எம்எல்ஏக்கள் ஆதரவு என்ற கேள்விக்கு எடப்பாடி பழனிச்சாமி பதில் தெரிவிக்கவில்லை. மேலும் சில எம்எல்ஏக்களை வெளியே காட்டவில்லை. ஒரு சிலர் மட்டும்தான் செய்தியாளர்களை சந்தித்தனர். ரெசார்ட்டில் இருந்து தப்பி வந்த மதுரை தெற்கு தொகுதி எம்எல்ஏ சரவணன், எம்எல்ஏக்களை சுதந்திரமாக விட்டால் அவர்கள் அனைவரும் ஒ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு அளிப்பார்கள் என்று தெரிவித்தார்.
முன்னதாக ஒ.பி.எஸ். பக்கம் வந்த மாபா பாண்டியராஜனும் இதையே தெரிவித்தனர். இந்தநிலையில் செய்தியாளர்களிடம் பேசிய ஒ.பன்னீர்செல்வம், கூவத்தூர் கோல்டன் பே ரெசார்ட்டில் அடைத்து வைக்கப்பட்டுள்ள அதிமுக எம்எல்ஏக்களை வெளியே விட்டால் தனக்கான ஆதரவு எம்எல்ஏக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்றார். தற்போது வரை 10 எம்எல்ஏக்கள் ஒ.பி.எஸ்.க்கு ஆதரவு அளித்துள்ளனர்.  நக்கீரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக