செவ்வாய், 14 பிப்ரவரி, 2017

கூவத்தூர் விடுதிக்கு மின்சாரம் துண்டிப்பு ... விடுதிக்கு செல்ல முயன்ற மாபா பாண்டியராஜன் தடுத்த போலீஸ்

கூவத்தூர் ரிசார்ட்டில் சட்டவிரோதமாக தங்கியிருப்பதால் எம்.எல்.ஏக்களை வெளியேறுமாறு போலீசார் அறிவுறுத்தியுள்ளனர். விருப்பப்படியே ரிசார்ட்டில் தங்கியிருப்பதக கூறி வெளியேற மறுக்கும் எம்.எல்.ஏக்களுடன் போலிசார் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். வேறு வழியின்றி, விடுதிக்கு வரும் தண்ணீர், சாப்பாட்டை அனுமதிக்க மறுக்கப்பட்டு வருகிறது. மேலும் தற்போது ரிசார்ட்டில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் ரிசார்ட் இருளில் மூழ்கிக்கிடக்கிறது. இதையடுத்து எம்.எல்.ஏக்கள் தானாகவே வெளியேறிவிடுவார்கள் என்று போலீசார் எதிர்பார்க்கின்றனர்

கூவத்தூர் ரிசார்ட்டில் ஆதரவு எம்.எல்.ஏக்கள் அடைக்கப்பட்டிப்பதாகவும், அவர்களை மீட்டு வருகிறேன் என்று முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூவத்தூர் புறப்பட்டார். இதனால் பதட்டமும் பரபரப்பும் ஏற்பட்டது. பின்னர் ஆதரவு எம்.எல்.ஏக்களை நான் மீட்டு வருகிறேன் என்று அமைச்சர் பாண்டியராஜன் கூவத்தூர் சென்றார். அசம்பாவிதங்கள் ஏற்படாமல் தடுக்கும் பொருட்டு, கூவத்தூரில் அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டனர். ஆனால், கிழக்கு கடற்கரை சாலையில் சென்றபோது கோவளத்தில் போலீசார் தடுத்து நிறுத்தினர். அமைச்சருடன் சென்ற எம்.எல்.ஏக்கள் மற்றும் முன்னாள் அமைச்சர்களும் தடுத்து நிறுத்தப்பட்டனர்.நக்கீரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக