சனி, 18 பிப்ரவரி, 2017

ஆட்சிக்கு எதிரான மக்களின் மன நிலையை திமுக பிரதி பலிக்கிறது

சென்னை:  இன்று நடைபெறுவது அதிமுகவின் எடப்பாடி பழனிச்சாமி அரசுக்கு எதிரான நம்பிக்கை வாக்கெடுப்பு. இதில் வெற்றி பெற்றால் சசிகலா தரப்பும், தோல்வியடைந்தால் ஓ.பன்னீர்செல்வம் தரப்பும் மகிழ்ச்சியடைந்திருக்க வேண்டும். எனவே அந்த இரு தரப்பும் அதிகப்படியான அக்கறை எடுத்து செயல்பட்டது, எதிர்பார்க்கப்பட்டதே. ஆனால் திமுகவினர் சட்டசபைக்குள் மிகப்பெரும் அமளியை கட்டவிழ்த்துவிட்டது ஏன் என்பதே கேள்வி. இந்த ஆட்சிக்கு எதிராக மக்கள் மனநிலை மாறியுள்ளதை திமுக நன்கு புரிந்து வைத்துள்ளது. கடந்த தேர்தல் நீதியான முறையில் நடக்கவில்லை என்று திமுக கூறி வரும் நிலையில் இந்த நிகழ்வை பார்க்க வேண்டி இருக்கறது . சுமார் 40 லட்சம் கள்ள ஓட்டுக்களை சகல தொகுதிகளிலும் பதிவு செய்ததும்,  தேர்தல் வாக்கு எண்ணப்படும் பொழுதே பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்ததை எல்லாம் திமுக மறக்க வில்லை என்பதை இப்போது நடக்கும் சம்பவங்கள் தெரிவிக்கின்றன
நியாயமற்ற முறையில் ஆட்சியை பிடித்த அதிமுகவை பழிதீர்க்க ஆரம்பித்து விட்டது என்பது தெளிவாக தெரிகிறது.
 ஆட்சியை கலைத்துவிட்டு தேர்தலில் மக்களை சந்திக்க வர வேண்டும் என்பதே பெருவாரியான மக்களின் கோரிக்கையாகவும் உள்ளது. இதை உணர்ந்து கொண்ட திமுக அமளியில் ஈடுபட்டால் கூட மக்களின் கோபம் நம் மீது திரும்பாது என கணக்கு போட்டதாக கூறுகிறார்கள் அரசியல் பார்வையாளர்கள். ரகசிய வாக்கெடுப்பு நடைபெற்றால் எடப்பாடி அணியிலிருந்தும் அவருக்கு எதிராக ஓட்டுக்கள் விழ வாய்ப்புள்ளது, எனவே ஆட்சி கலைந்து தேர்தலை சந்திக்கலாம் என்பதே திமுகவின் திட்டம்.
எனவேதான் ரகசிய வாக்கெடுப்பு கேட்டு ஸ்டாலின் இன்று சட்டசபையில் பேசினார். அதை சபாநாயகர் ஏற்காத நிலையில் அமளியை கையில் எடுத்தது திமுக. மொத்தத்தில் அமளியை காரணமாக வைத்து ஆட்சி கலைப்புக்கு ஆளுநர் நடவடிக்கை எடுப்பார் என நம்புகிறது திமுக. இனிவரும் காட்சிகளை பொறுத்திருந்து பார்க்கலாம்.  tamiloneindia

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக