சனி, 18 பிப்ரவரி, 2017

சட்டசபையில் கலவரம் ... 355 பாயும்? தாமரை கனி போன்ற ஸ்டன்ட் நடிகர்கள் இல்லையே?

Troll Mafia s · நடப்பது மானியக் கோரிக்கை அல்ல! நம்பிக்கை வாக்கெடுப்பு! அதில் அனைவருக்கும் உரிமையுண்டு இல்லையேல் உரிமைமீறல் ஆகிவிடும் வாக்கெடுப்பில் கலந்து கொள்ள விடாது.. எதிர்ப்போரை வெளியேற்றி ஆதரிப்போரை மட்டும் வைத்து நடத்தினால், Article 355 பாயும் கூச்சலோ...குழப்பமோ.. அதைச் சமாளித்து எப்படியேனும் வாக்கெடுப்பு நடத்திக் காட்டுவதே பேரவைத் தலைவரின் திறன்! வாக்குச் சாவடியில், பொது மக்களை வெளியேற்றி, வாக்கெடுப்பு நடத்த முடியாது.. அதுபோலவே பேரவை வாக்கெடுப்பும்!
Stanley Rajan · முகம் துடைத்டுவிட்டு, குடிநீர் குடித்துவிட்டு சற்று ஆசுவாசபடுத்திய பிரேக் முடிந்து மறுபடியும் கோதாவுற்குள் வந்தாயிற்று ஆட்டம் விறுவிறுப்பாக செல்கின்றது இந்த ரவுண்டில் முதல் குத்து யாரிடம் இருந்து வரும் என தமிழகமே ஆவலாய் இருக்கின்றது சே.. தாமரைகனி, வீரபாண்டி ஆறுமுகம் இந்த நேரம் இல்லாமல் போனது நமது துரதிருஷ்டம் ஆனால் என்ன? பல அனுபவசாலிகள் உள்ளேதான் இருக்கின்றார்கள் அந்த 130 பேரையும் ரிசார்ட் அனுப்புவதற்கு பதிலாக "இறுதிசுற்று" மாதவன் போல ஒருவரிடம் அனுப்பியிருக்கலாமோ என சசிகலா தரப்பு யோசித்து கொண்டிருக்கலாம்...முகநூல் பதிவு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக