வெள்ளி, 17 பிப்ரவரி, 2017

விகடன் :மலையாளிகளை திரும்ப அழைத்துக்கொள்ளுங்கள்...!' கேரளாவுக்கு எதிராக எழும் கண்டனம்

பவானி ஆறு அணைதமிழகத்தில் கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களின் நீராதாரமாகவும், பாசனத்திற்கான ஆதாரமாகவும் இருக்கும் பவானி ஆற்றின் குறுக்கே 6 தடுப்பணை கட்டும் பணிகளை கேரளா அரசு துவக்கி இருக்கிறது. ஏற்கெனவே வசாயத்துக்கு நீரின்றி விவசாயிகள் தற்கொலை செய்து வரும் நிலையில், இப்போது பவானி ஆற்றின் குறுக்கே 6 தடுப்பணைகளை கட்டி பொதுமக்கள், விவசாயிகள் வயிற்றில் புளியை கரைத்திருக்கிறது கேரளா. தடுப்பணை கட்டுவதற்கு எதிராக கடந்த இரு மாதங்களுக்கு மேலாக மக்கள் போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். போராட்டத்தின் துவக்கத்தில் தமிழகத்தின் முதல்வராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் பிரதமருக்கு கடிதம் எழுதினார்.  ஆனால் எந்தப் பலனும் இல்லை. அதன் பின்னர் ஏற்பட்ட அரசியல் பரபரப்பில் இதை யாரும் கண்டுகொள்ளவில்லை. மக்கள் அழுத்தம் கொடுத்ததால் மிழக முதல்வராக இருந்த ஓ.பன்னீர்செல்வம், அறிக்கையும், பிரதமருக்கு கடிதமும் எழுதிக்கொண்டிருந்த போதே அதைப்பற்றி துளியும் கண்டுகொள்ளாமல் அணை கட்டும் வேலைகளை தீவிரமாக செய்த கேரளா, இப்போது நிலவும் அரசியல் பரபரப்பில் யாரும் இதை கண்டுகொள்ளாததால் எந்த சிக்கலுமின்றி பணிகளை வேகப்படுத்தியுள்ளது.

பவானி ஆறு அணை
இந்நிலையில் பவானி ஆற்றின் குறுக்கே கேரளா அரசு அணை கட்டுமிடத்துக்குசென்ற தமிழ்த் தேசிய பேரியக்கத்தின் தலைவர் பெ.மணியரசன், அங்கு நடப்பதை பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, "பவானி ஆற்றின் குறுக்கே 6 இடங்களில் தடுப்பணை எனும் பெயரில் நீர்த்தேக்கம் செய்கிறது கேரளா. இவை கட்டப்பட்டு விட்டால் கசிவு நீர் கூட தமிழ்நாட்டுக்கு பவானியில் வராது. இதனால் கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் 3 லட்சம் ஏக்கர் சாகுபடி முழுமையாய் பாதிக்கப்படும். ஒரு கோடி மக்களின் குடிநீர் பறிக்கப்படும். ஒரு கோடி தமிழ் மக்களின் வாழ்வுரிமையை கருத்தில் கொண்டு  இந்தத் திட்டத்தை கேரளா உடனே கைவிட வேண்டும்.
இந்திய அரசமைப்புச் சட்டம், உச்சநீதிமன்றம் ஆகியவற்றின் வழியாக தமிழர்களுக்கு கிடைக்க வேண்டிய நீதி மறுக்கப்பட்டு வருகிறது. இதனால் தமிழர்களின் வாழ்வுரிமை பறிக்கப்படுகிறது. இது போன்ற சூழலில் தமிழர்கள் தங்களை தற்காத்துக்கொள்ள என்ன செய்ய வேண்டுமென சிந்தித்தோம். பவானி ஆறு அணை
பவானியில் புதிய அணைகள் கட்டும் திட்டத்தை கேரளா அரசு கைவிடவில்லை என்றால், பவானித் தண்ணீரை பயன்படுத்தும் கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் அதிக எண்ணிக்கையில் வாழும் மலையாளிகளை கேரளா அரசு திரும்ப அழைத்துக்கொள்ள வேண்டும். அவ்வாறு அழைத்துக்கொள்ள மறுத்தால் இந்த மூன்று மாவட்டங்களில் வாழும் மலையாளிகளின் வீட்டு வாசலுக்கு சென்று, கேரளாவுக்குதிரும்பச் செல்லுமாறு அறவழியில் கேட்டுக்கொள்ளும் மக்கள் இயக்கத்தை நடத்துவோம்," என்றார்.
தமிழக அரசியல் பரபரப்பில் அரசால் கண்டுகொள்ளாமல் விடப்பட்ட பவானி ஆற்றின் குறுக்கே அணை கட்டும் பிரச்னை விஸ்வரூபமெடுக்கத்துவங்கியிருக்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக