வியாழன், 23 பிப்ரவரி, 2017

மகாராஷ்டிரா உள்ளாட்சித் தேர்தல்.. சிவசேனா, பாஜக வெற்றி!


மகாராஷ்டிர மாநில உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் சிவசேனாவும், பாஜக-வும் பெரும்பான்மை இடங்களை கைப்பற்றியுள்ளன.
மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்று முடிந்தநிலையில், இன்று வாக்குகள் எண்ணப்பட்டன. நாட்டிலேயே மிகப் பெரியதும் பொருளாதார வளம் கொண்டதுமான மும்பை நகராட்சிக்கு நடைபெற்ற தேர்தலில் பெரும்பான்மையான இடங்களில் சிவசேனா கட்சி முன்னணி பெற்று வெற்றியடைந்துள்ளது. மொத்தமுள்ள 227 இடங்களில் சிவசேனா கட்சி 94 இடங்களில் முன்னணியில் உள்ளது. பாரதிய ஜனதா கட்சியைப் பொருத்தவரை 60 இடங்களில் வெற்றிபெற்றுள்ளது.
இதற்கு அடுத்தபடியாக காங்கிரஸ் 22 இடங்களில் வென்றுள்ளது. தொடர்ந்து, மகாராஷ்டிரா நவ நிர்மாண் சேனா கட்சி 10 இடங்களிலும், தேசியவாத காங்கிரஸ் 8 இடங்களிலும், அகில இந்திய மஜ்லிஸ் ஈ இத்தாகதுல் முஸ்லிமீன் கட்சி 4 இடங்களிலும் வென்றுள்ளது.

சிவசேனாவின் வெற்றியை அதன் கட்சித் தொண்டர்கள் மும்பை முழுவதும் கொண்டாடிவருகின்றனர். அதேநேரம், இந்தச் செய்தியால் அதிர்ச்சியடைந்த மும்பை காங்கிரஸ் தலைவர் சஞ்சய் நிருபம் தன்னுடைய பதவியை ராஜிநாமா செய்துள்ளார்
சட்டமன்றத் தேர்தலில் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டு ஆட்சியமைத்த சிவசேனாவும் பாஜக-வும் இந்தத் தேர்தலில் தனித்தனியாக களமிறங்கின. இதனால் உள்ளாட்சி அமைப்புகளில் இரு கட்சிகளிடையே கடும் போட்டி நிலவியதால் உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன.  மின்னம்பலம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக