வியாழன், 16 பிப்ரவரி, 2017

அதிமுக எம்.எல்.ஏக்கள் மீண்டும் கூவத்தூர் ரிசார்ட்டில் அடைப்பு .. பன்னீர் வீட்டுக்கு கல்வீச்சு .. பதட்டம்

எடப்பாடி கே.பழனிச்சாமி முதல்வராக பதவியேற்றதும் சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள ஓ.பன்னீர்செல்வத்தின் வீடு மீது சசிகலா ஆதரவாளர்கள் கல்வீசி தாக்குதல் நடத்தினர். ஓபிஎஸ் ஆதரவாளர்களும் பதிலுக்கு தாக்குதல் நடத்தினர். இதனால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டது. ஓபிஎஸ் ஆதரவாளர்கள் அப்பகுதியில் திரண்டு வருவதால் போலீஸ் பெருமளவில் குவிக்கப்ப ட்டுள்ளனர். படங்கள்: ஜீவாபாரதி
;அதிமுக எம்.எல்.ஏக்கள் மீண்டும் கூவத்தூர் ரிசார்ட்டில் அடைப்பு! கடந்த ஒருவாரத்திற்கு மேலாக அதிமுக எம்.எல்.ஏக்கள் கூவத்தூர் ரிசார்ட்டில் அடைத்து வைக்கப்பட்டிருந்தனர். இன்று மாலை ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற அமைச்சர்கள் பதவியேற்பு விழாவிற்கு அழைத்து வரப்பட்ட அவர்கள், விழா முடிந்ததும் பழைபடியே கூவத்தூர் ரிசார்ட்டில் கொண்டுபோய் அடைத்துவைக்கப்பட்டுள்ளனர். நக்கீரன் ;

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக