செவ்வாய், 7 பிப்ரவரி, 2017

பன்னீர் ஒன்றும் புனிதர் அல்ல ! ஒரே மாபியாவின் பல்வேறு முகங்கள் மட்டுமே!

திமுகவினர் சிலர் பின்விளைவுகளை புரிந்துகொள்ளாமல், சசிகலாவை எதிர்ப்பதாக எண்ணிக்கொண்டு, ஓபிஎஸ்சுக்கு ஆதரவாக பேசுகிறர்கள்.. ஏன் தான் இப்படியான தவறுகளை திரும்ப திரும்ப செய்கிறார்களோ, புரியவில்லை.. ஓபிஎஸ் ஒன்றும் புனிதரால்ல.. கிரானைட் புகழ் PRPயிலிருந்து, சேகர் ரெட்டி வரை தொடர்புடையவர்... மத்திய பிஜேபி அரசு சில பல காரணங்களுக்காக இவர் விஷயத்தில் கொஞ்சம் அடக்கிவாசிக்கிறார்கள்...
ஆனால் ஓபிஎஸ்சுக்கு மக்கள் மத்தியில் சுய செல்வாக்கு இல்லை, சொந்த கட்சியில் மதிப்பில்லை, தனது தலைமையிலான அமைச்சரவை சகாக்களிடம்மே ஆதரவில்லை, அதிமுக MLAக்களிடம்மே ஆதரவில்லை.. இவரை நம்பி இதுவரை ஒரு MLAகூட வெளியேவரவில்லை, ஆதரவாகவும் குரல் கொடுக்கவில்லை...
இந்த இரு மாதத்திலேயே, ஓபிஎஸ்சை ஏதோ சூப்பர் மேன் ரீதியில் தினமலர், துக்ளக் கும்பல்கள் தூக்கிப்பிடிகின்றன.. RSS பிஜேபி கும்பல், மோடிக்கு எப்படி இமேஜ் பில்ட்டப் செய்ய இணையத்தில் குழு வைத்துள்ளர்களோ, அவர்களே ஓபிஎஸ்சுக்கும் இமேஜ் பில்ட்டப் செய்கிறார்கள்..
பிராமணர்களுக்குள்ள வர்ம்புமீறிய சட்ட விரோத சலுகைகள் மற்றவர்களுக்கு பொருந்தாது. ஜெயாவிற்கு மட்டுமே பொருந்தும். அதிமுகவிற்கு இல்லை. மற்றவர்கள இதை புரிந்து கொள்ளவில்லை. எல்லோரும் பூணுல் போடமுடியாது. தெருமாவுக்கு புரியாமல் முந்திக்கொண்டார்.
வாட்ஸ்ஆப் மெசேஜ்கள் பரப்புகிறார்கள்... ஓபிஎஸ் போல எளிமையான முதல்வர் உண்டா?? வேலை செய்யும் முதல்வர் உண்டா என பில்டப் தொடர்ந்து நடக்கும்..
இன்னும் நாலு வருடங்கள் இதையே இந்த ஊடக பார்பன கும்பல்கள் தீவிரமாக செய்வார்கள்.. போதாதுக்கு, டிவி ஊடக ஜால்ராக்கள் & சமூக ஆர்வலர் கும்பல்கள் என பெரிய அளவில் கச்சேரிகள் செய்து, பிம்பத்தை உருவாக்கிவிடுவார்கள்.. அதன்பின், தீபாவை ஜெயாவின் தோற்றத்தில் உலவ செய்து, சாமான்ய அதிமுகவினரை வளைத்துபோடுவார்கள்...
எதிர்காலத்தில் சசிகலாவை ஓரங்கட்டிவிட்டு, இரெட்டை இலை சின்னத்தோடு ஓபிஎஸ் + தீபா + பார்பன ஊடகங்கள் + தொலைக்காட்சி ஜால்ராக்கள் + RSS & பிஜேபியின் பின்வாசல் ஆதரவோடு களம் காணுவார்கள் Prakash JP முகநூல் பதிவு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக