புதன், 22 பிப்ரவரி, 2017

எடப்பாடி பழனிச்சாமி மீது மூன்று கொலை வழக்குகள் : ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்

சென்னையில் திமுக உண்ணாவிரதத்தில் தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் கலந்துகொண்டார். அப்போது முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மீது 3 கொலை வழக்குகள் உள்ளன என அவர் குற்றம்சாட்டினார்.
 திருநாவுக்கரசு காங்கிரசையே கொல்றாரே
கடந்த சனிக்கிழமை சட்டசபையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பின் போது தி.மு.க.,வினர் தாக்கப்பட்டு வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டனர். இதில் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் உட்பட சட்டசபை தலைவர்கள் பலரின் சட்டைகள் கிழிக்கப்பட்டன. இதனைக் கண்டித்தும் தமிழகம் முழுவதும் தி.மு.க.,வினர் இன்று உண்ணாவிரதத்தில் ஈடுப்பட்டுள்ளனர். சென்னை வள்ளலார் நகரில் நடைபெறும் உண்ணாவிரதப் போராட்டத்தில் தமிழக முன்னாள் காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் கலந்துகொண்டார்.
அப்போது பேசிய அவர் மக்களை ஏமாற்றி சொத்து சேர்த்ததால் சிறைக்கு போனவர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா என்றார். மேலும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மீது 3 கொலை வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் குற்றம்சாட்டினார். அதிக குற்றம் செய்தவருக்கே அ.தி.மு.க.வில் பதவி பெறுவதற்கு தகுதியாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார். மேலும் அதிமுகவினரிடம் இருந்து நல்ல விஷயங்களை எதிர்பார்ப்பது முட்டாள்தனம் என்றும் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தெரிவித்தார்.  மின்னம்பலம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக