புதன், 22 பிப்ரவரி, 2017

திருமாவளவன் : திமுகவின் போராட்டம் நியாயமானது

திமுகவின் போராட்டம் நியாயமானது: திருமாவளவன் பேட்டிபேரவை நிகழ்வுகள் மீதான எதிர்க்கட்சிகளின் போராட்டம் நியாயமானது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். திமுகவின் போராட்டம் நியாயமானது: திருமாவளவன் பேட்டி சேலம்: சட்டசபையில் திமுக உறுப்பினர்கள் வெளியேற்றப்பட்ட சம்பவத்தை கண்டித்து தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் தி.மு.க. சார்பில் இன்று உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. இந்நிலையில், பேரவை நிகழ்வுகள் மீதான எதிர்க்கட்சிகளின் போராட்டம் நியாயமானது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசும் போது இந்த கருத்தினை அவர் தெரிவித்தார். மேலும் அப்போது திருமாவளவன் பேசியதாவது:- தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பினாமியாக அல்லாமல் சுதந்திரமாக செயல்பட வேண்டும். பேரவை நிகழ்வுகள் மீதான எதிர்க்கட்சிகளின் போராட்டம் நியாயமானது.மாலைமலர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக