வெள்ளி, 3 பிப்ரவரி, 2017

சசிகலா மட்டும் தானா ஸ்டாலினையும் கூப்பிடுங்க; அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில்

 மதுரை மாவட்டம் அலங்காநல்லுாரில் பிப்., 10 ம் தேதி நடக்கும், ஜல்லிக்கட்டில் பங்கேற்க அ.தி.மு.க., பொது செயலர் சசிகலா விற்கு, அழைப்பு விடப்பட்டுள்ளதால், இதற்காக முதலில் அலங்காநல்லுார் வந்து போராடிய தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின் உட்பட அனைத்து கட்சியினரையும் அழைக்க வேண்டும் எனகிராமத்தினர் வலியுறுத்தியுள்ளனர். உச்சநீதிமன்ற தடையால் இரண்டு ஆண்டு களாக ஜல்லிக்கட்டு நடக்கவில்லை. ஜல்லிக் கட்டு நடத்தக் கோரி கிராம கமிட்டியினர் தொடர்ந்து வலியுறுத்தினர். இதற்காக முதன் முதலாக தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின், பின்னர் தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த், த.மா.கா., தலைவர் வாசன் உட்பட அனைத்து கட்சியினரும் அலங்காநல்லுார் சென்று போராடினர்.
தி மு க ஆட்சி காலத்தில் ஜல்லிக்கட்டுக்கு ஏது தடை.. கடந்த மூன்று ஆண்டுகளாகத் தானே (2014ல் உச்ச நீதி மன்ற உத்திரவிற்கு பின்) ஜல்லிக்கட்டுக்கு தடை வந்தது....தி மு க ஆட்சியில் இருந்தபோது சட்டசபையில் மத்திய சட்டத்தில் இருந்து விலக்கு பெற ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக சட்டம் இயற்றினார்கள். ஆனால் ஜனாதிபதி ஒப்புதல் பெறுவதற்குமுன் அவர்கள் ஆட்சி போய் அ தி மு க ஆட்சி வந்துவிட்டது....


இதன் உச்சமாக மாணவர்களும், இளைஞர் களும் மாநிலம் முழுவதும் போராட்டத் தில் ஈடுபட்டனர். இதையடுத்து முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் டில்லி சென்று மோடியை சந்தித்து ஆலோசித்தார். பின் அவசர சட்டம் இயற்றியதை யடுத்து ஜல்லிக்கட்டு பல்வேறு இடங்களில் நடந்து வருகிறது. அலங்காநல்லுாரில் பிப்., 10, பாலமேட்டில் பிப்., 9ல் ஜல்லிக்கட்டு நடத்த விழா கமிட்டியினர் முடிவு செய்துள்ளனர்.

விழா கமிட்டியினர் சந்திப்பு:

அலங்காநல்லுார் விழா கமிட்டியினர், நேற்று மதுரையில் கலெக்டர் வீரராகவ ராவை சந்தித்து முறைப்படி அனுமதி கோரினர். இதில் எம்.எல்.ஏ., மாணிக்கம் மற்றும் கமிட்டி தலைவர் சுந்தர், செயலர் சுந்தரராகவன் மற்றும் பலர் பங்கேற்றனர். பிப்., 6 ல் கலெக்டர் அலுவலகத்தில் அனைத்து துறை அதிகாரிகள் கூட்டத்தில், ஜல்லிக்கட்டு ஏற்பாடுகள் குறித்து ஆலோசிக்க முடிவு செய்யப் பட்டது.எம்.எல்.ஏ., கூறுகையில், ''விழா கமிட்டி யினர் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை சந்தித்து விழாவில் பங்கேற்கஅழைப்பு விடுத்துள்ளனர். அ.தி.மு.க., பொது செயலர் சசிகலாவிற்கும் அழைப்பு விடப்பட்டுள்ளது,'' என்றார்.

தி.மு.க., எம்.எல்.ஏ., சந்திப்பு:

அவர்களுக்கு பின் தி.மு.க.,வை சேர்ந்த எம்.எல்.ஏ., மூர்த்தியும் கலெக்டரை சந்தித்தார். பின் அவர் கூறுகையில், ''ஜல்லிக்கட்டிற்காக < அனைத்து கட்சியினர், மாணவர்கள், இளைஞர் கள் போராடினர். ஸ்டாலின் உட்பட அனைத்து தரப்பினரையும் அழைக்க வலியுறுத்தினேன். ஸ்டாலின் கட்டாயம் பங்கேற்பார்,'' என்றார்.

அலங்காநல்லுார்:

இதற்கிடையில் ஜல்லிக்கட்டிற்காக போராடிய அனைத்து கட்சி தலைவர்களையும் அழைக்க வேண்டும் என அலங்காநல்லுார் கிராமத்தினர் விழா கமிட்டியினரை வலியுறுத்தியுள்ளனர். இதுகுறித்து அனைத்து கட்சியினர் கூடி ஆலோசித்தனர். ஸ்டாலின் உட்பட அனைத்து கட்சி தலைவர்களையும் சந்தித்து, ஜல்லிக் கட்டில் பங்கேற்க அழைப்பு விடுவதற்காக, கிராமத்தினர் சென்னை செல்ல முடிவு செய்துள்ளனர்.   dinamalar

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக