புதன், 1 பிப்ரவரி, 2017

அந்நிய செலாவணி வழக்கில் சசிகலா ! விடுவிக்க முடியாது .. உயர்நீதிமன்றம் உத்தரவு

அன்னிய செலாவணி மோசடி வழக்கில் அதிமுக பொதுச்செயலாளர் சசிகலாவை விடுவித்து சென்னை எழும்பூர் பொருளாதார குற்ற வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.1990 ஆம் ஆண்டுகளில் பரணி பீச் ரெசார்ட்  என்ற நிறுவனத்திற்கு வெளிநாட்டு வாழ் இந்தியர் சுசிலா ராமசாமி என்பவரின் வைப்பு தொகையை பினாயக் காட்டி இந்தியன் வங்கி அபிராமபுரம் கிளையில் 3 கோடி ரூபாய் கடனாக பெறப்பட்டது. இந்த தொகையில் இருந்து 2.20 கோடி தொகையை சசிகலா எடுத்து கொடநாடு எஸ்டேட் வாங்க பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு குறித்து அமலாக்க பிரிவு வழக்கு பதிவு செய்தது. இதே போல பிரிட்டன் வெர்ஜின் தீவுகளில் உள்ள பார்க்லே  வங்கி மூலமாக டிப்பர்  இன்வெஸ்ட்மெண்ட் என்ற நிறுவனத்திற்கு 1.04 கோடி அமெரிக்க டாலர் பரிமாற்றம் செய்ததாகவும்,அயர்லாந்து வெஸ்ட் வங்கி மூலமாக 44.37 லட்சம் பவுண்ட் ,சட்ட விரோதமாக பரிமாற்றம் செய்ததாக அமலாக்க பிரிவு வழக்கு பதிவு செய்தது. சசிகலா மற்றும் தினகரன் ஆகியோரை இந்த 3 வழக்குகளிலிருந்து விடுவித்து எழும்பூர் பொருளாதார குற்ற வழக்கு விசாரிக்கும் நீதிமன்றம் கடந்த 2015 மே மாதம் உத்தரவிட்டது.
சசிகலா, தினகரன் விடுவிக்கப்பட்ட  இந்த 3 வழக்குகளை எதிர்த்து அமலாக்க துறை சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.

அதே சமயம் தனியார் தொலைக்காட்சி ஒளிபரப்புக்கு வெளிநாட்டைச்  சேர்ந்த ரிம்சேட்  , சபீக் பே ஆகிய நிறுவனங்கலுக்கு, அன்னிய செலாவணி விதிகளை மீறி 5 லட்சம் அமெரிக்க டாலர் பரிமாற்றம் செய்ததாகவும், சிங்கப்பூர் நிறுவனத்துக்கு 10.45 லட்சம் சிங்கப்பூர் டாலர் பரிமாற்றம் செய்ததாகவும் , 36.36 அமெரிக்க டாலர் சட்ட விரோத மாக பரிமாற்றம் செய்ததாகவும் வழக்குகள் அமலாக்க பிரிவு பதிவு செய்திருந்தது. சசிகலா மீது தொடரப்பட்ட இந்த 3 வழக்குகளில் இருந்து விடுவிக்க எழும்பூர் நீதிமன்றம் மறுத்து விட்டது. சசிகலாவை விடுவிக்க முடியாத இந்த 3 வழக்குகளிலும் தன்னை விடுவிக்க கோரி  சென்னை உயர் நீதிமன்றத்தில் சசிகலா மேல்முறையீடு செய்தார்.

அனைத்து தரப்பு வாதங்கள் முடிந்து நிலையில் , இந்த 6 மேல்முறையீடு வழக்கில்,சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நீதிபதி சொக்கலிங்கம் இன்று தீர்ப்பளித்தார். அதில், சசிகலாவின்  மேல்முறையீடு மனுக்களை தள்ளுபடி செய்தார். மேலும் சசிகலா மற்றும் தினகரன் 3 வழக்குகளில்  எழும்பூர் பொருளாதார குற்ற வழக்குகள் விசாரிக்கும் நீதிமன்றம் விடுவித்து பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து தீர்ப்பளித்துள்ளார்.

உச்சநீதிமன்றத்தில் சொத்து குவிப்பு வழக்குகளின் தீர்ப்பு வரவிருக்கும் நிலையில் தற்போது தினாகரன்,நடராஜன் மீதான அன்னிய செலாவணி மோசடி வழக்குகளின் விசாரணை வேகமேடுத்து வருகிறது. தற்போது சசிகலா மீதான அன்னிய செலாவணி மோசடி வழக்கு மேலும் கார்டன் தரப்பை அதிர்ச்சி அடையவைத்திருக்கிறது.  <">- சி.ஜீவா பாரதிநக்கீரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக