புதன், 1 பிப்ரவரி, 2017

பட்ஜெட் 2017: ஐந்து மாநில தேர்தல் சலுகை பட்ஜெட்!

அருண் நெடுஞ்செழியன்thetimestamil.com :அருண் நெடுஞ்செழியன்: பட்ஜெட் அறிவிப்பு வரவுள்ள ஐந்து மாநில தேர்தலை ஒட்டி சில சலுகைகளை
எலும்புத் துண்டுகளைப் போல வீசியுள்ளது. செல்லாக் காசு அறிவிப்பு மற்றும் புதிய சேவை வரியை சுற்றியே பெரும் பொருளாதார மாற்றங்களை சாதனையாக கட்ட முனைகிறது.
இதை கார்பரேட் ஊடகங்கள் பெரிதுபடுத்தும். குறிப்பாக ஊரக வேலை வாய்ப்புத் துறைக்கு கூடுதலாக பத்தாயிரம் கோடி ஒதுக்கீடு, சிறு குறு தொழில்களுக்கு சில வரிச்சலுகை
போன்றவற்றை கோடிட்டு காட்டலாம். மாறாக பட்ஜெட்டைவிட, பட்ஜெட்டுக்கு
முன்பாக வெளியிட்ட பொருளாதார அறிக்கையானது ஆளும்வர்க்க  நலனை மேலதிகமாக வெளிப்படுத்துகிறது. இங்கு நாம் கவனிக்க வேண்டிய அம்சங்கள் முறையே..

உலகளாவிய பொருளாதார நெருக்கடி, எண்ணெய் விலையேற்றம், சேவைத் துறை ஏற்றுமதி, அமெரிக்க டாலர்-சீன யேன் மதிப்பிற்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, பருவநிலை, அந்நிய முதலீடுகள், அமெரிக்காவின் தற்காப்புக் கொள்கை போன்ற காரணிகளில் ஏதோவொன்றில் பாரிய மாற்றம் நடந்தால் இந்திய பொருளாதாரம் வேகமாக நெருக்கடியை நோக்கி செல்லும். 7 விழக்காட்டு ஜிகினா வளர்ச்சி ஒரே இரவில் பாதியாகக் கூட குறையும். ஏனெனில் இந்திய பொருளாதாரம் முழுக்க முழுக்க உலக சந்தை எனும் வெளிக் காரணியால் பெரும்பாலும் தீர்மானிக்கப்படுகிறது.
உண்மை என்னவென்றால் இந்திய தொழிற்துறை, உலக சந்தையில் போட்டி போடுகிற வகையில் தரமான, விரிவான, அதிக உற்பத்தி பொருளை உற்பத்தி செய்யாமை

முதலாளியமப்படுத்தப்படாத – நிலசீர்திருத்தம் மேற்கொள்ளப்படாத இந்திய வேளாண் துறைசர்வதேச அளவில் தொழில்துறை மூலத்தை உறிஞ்சி வளருகிற நிதி மூலதனத்தின் ஊகவணிக வளர்ச்சி காரணிகள் இந்திய பொருளாதாரத்தை ஒருபோதும் உறுதியான வளர்ச்சிக்கு இட்டுச் செல்லாது.
நவம்பர் எட்டாம் தேதி அறிவித்த செல்லாக் காசு அறிவிப்பின் ஊடாக வங்கி திவால் நிலையை சரிக் கட்டிய மத்திய அரசு, அந்தப் பணத்தை கொண்டு மீண்டும்
இந்தியப் பெரு முதலாளிகளுக்காக சூதாடி வருகிறது! சில சில்லறைகளை வீசி எரிகிறது. மக்களின் வரிபணத்தை உறிஞ்சிக் கொண்டு, சேமிப்பை உறிஞ்சிக்கொண்டு, நூற்றுக்கும் மேற்பட்ட மக்களை வங்கி வாசலில்  சாக விட்டு, மக்களை வஞ்சித்த இந்த அரசை, விவசாயிகளை தற்கொலைக்கு தள்ளுகிற இந்த அரசை, பாட்டாளிகளை ரோட்டில் நிற்க வைக்கிற இந்த அரசை விரைவில் உழைக்கும் வர்க்கம் பழிதீர்த்தே தீரும்!!!
அருண் நெடுஞ்செழியன், சமூக-அரசியல் விமர்சகர். எடுபிடி முதலாளித்துமும் சூழலியமும், மார்க்சிய சூழலியல்அணுசக்தி அரசியல்  ஆகிய நூல்களின் ஆசிரியர். மோடி அரசின் பணமதிப்பு நீக்க நடவடிக்கை விளைவுகள் குறித்து எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு ‘செல்லாக் காசின் அரசியல்’ என்ற பெயரில் நூலாக வந்துள்ளது. புத்தக சந்தையில் விற்பனைக்குக் கிடைக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக