திங்கள், 20 பிப்ரவரி, 2017

கூவத்தூரில் காமன் கூத்து .. கதறிக்கொண்டு ஓடித்தப்பிய பெண்கள் .. நாறிப்போன விடுதி !

அந்த லெட்டர் பேடில் இருந்த 044-71011555 என்ற எண்ணுக்கு நாம் ஃபோன் பண்ணியபோது, "எஸ்.,  கோல் டன் பே ரிசார்ட்ஸ் ரிசப்ஷன்' என்ற பதில் வந்ததும், ""என்ன சார் உங்க லெட்டர்பேடில் ஒரு எம்.எல்.ஏ. எழுதியதாக வாட்ஸ் அப்பில் கடிதம் ஒண்ணு பரவுதே''’என நாம் கேட்டதற்கு, ""அதைப்பற்றி ஒண்ணும் தெரி யாது சார்''’என்ற பதில் வந்தது. ""எம்.எல்.ஏ.க்களெல்லாம் சாப் பிட்டார்களா'' என்ற நமது கேள்விக்கு, ""சாப்பிட்டாங்க சார்'' என்றார் அந்த ரிசப்ஷனிஸ்ட்.
t;பிப்.15-ஆம் தேதி மாலை ரிசார்ட்சுக்கு வெளியே மீடி யாக்களிடம் பேசிய தி.நகர் எம்.எல்.ஏ. சத்யா, ""காலையிலேயே மட்டன் போடுறாங்க, அப்புறம் "மட்டை'யாக்கிடுறாங்க''’என திருவாய் மலர்ந்ததும் பின்னால் நின்றிருந்த பவுன்சர் அப்படியே இழுத்துக்கொண்டு ரிசார்ட்சுக் குள் போய்விட்டார்.&>இதெல்லாம் முதல்வராக பதவி ஏற்க வருமாறு எடப்பாடி பழனிச்சாமியை பிப். 16-ஆம் தேதி, கவர்னர் அழைப்பதற்கு முன்பு நடந்த அக்கப்போர்கள். 
;அதற்கு இருநாட்கள் முன்பு, நம்மை செல்ஃபோனில் தொடர்புகொண்ட ஒரு பெண், “""அமைச்சர்களையும் எம்.எல். ஏ.க்களையும் அடைத்து வைத் துள்ள கூவத்தூர் கேம்ப்பில் டி.வி. சீரியல் நடிகை ஒருவர் பட்ட பாட்டை உங்களிடம் சொல்ல வேண்டும், நேரில் வரமுடியுமா?'' எனக் கேட்டதும், அவர் சொன்ன ஸ்பாட்டிற்குச் சென்றோம். தன்னைப் பற்றி நம்மிடம் அறிமுகம் செய்து கொண்ட அந்தப் பெண், ""மொதல்ல எனக்குக் கிடைத்த மேட்டரையும் பிறகு அந்த டி.வி.சீரியல் நடிகை மேட்டரையும் சொல்றேன்'' என்றவாறு ஆரம்பித்தார்


"முக்கால்வாசி சினிமாக் களிலும் அவ்வப்போது டி.வி. சீரியல் களி லும் நடிக் கும் இரண் டெழுத்து இன்ஷியல் கொண்ட சீனியர் நடிகை அவர். அம்மா, அக்கா கேரக்டர்களிலும் சமீபத்தில் மறைந்த மோஸ்ட் வாண்டட் குணச்சித்திர நடிகரின் மனைவியாகவும் நடித்தவர். சப்ளை அண்ட் சர்வீஸில் பேர் பெற்ற நடிகையான இவரின் கஸ்டடியில் சென்னை வடபழனி, சைதாப்பேட்டை, அண்ணா நகர், முகப்பேர், கே.கே.நகர் பகுதிகளில் ஏகப்பட்ட செகண்ட் ஹீரோயின் களும் துணை நடிகைகளும் உள்ளனர்.

வி.வி.ஐ.பி.க்கள் மட்டும் சந்திப்பதற்காக சில ஹீரோ யின்களையும் கைவசம் வைத் துள்ளார். ஏ.டி.எம்.கே. எப்போ ரூலிங் பார்ட்டியா வருதோ அப்பல்லாம் இவரின் காட்டில் பண மழைதான்.

;எம்.எல்.ஏ.க்களை பஸ்ஸில் ஏற்றிக்கொண்டு கடற்கரை சாலையில் சுற்றிக்கொண்டிருக்கும் போதே இவருக்குத் தகவல் வந்துவிட்டது. கூவத்தூர் போய் இறங்கிய அந்த ராத்திரி நேரத் தில் ஒரு அமைச்சரிடமிருந்து சிக்னல் வர, சில செகண்ட் ஹீரோயின்களை அப்ரோச் பண்ணி விஷயத்தைக் கூறியுள் ளார். "ஆத்தாடி இத்தனை பேரா' என அரண்ட அந்த நடிகைகள் வர மறுத்துவிட்டனர். அதன்பின் சில துணைநடிகைகளுக்கு அதிக ரேட் பேசி கூட்டிக்கொண்டு போயுள்ளார்.

அங்கே நடந்த காட்டுத் தர்பாரால் கதற ஆரம்பித்துவிட்ட துணை நடிகைகள், "உயிர் பொழச்சா போதும்' எனத் தப்பி ஓடிவந்துவிட்டனர்''’என நான்ஸ்டாப்பாக சொல்லிக் கொண்டே வந்தவர், ""ஒரு காபி சாப்பிட்டுட்டு பேசலாமே''’என்றார்.

;பத்து நிமிட ஆசுவாசத்திற்குப் பின் மீண்டும் பேச ஆரம்பித்தார்.

"பெண்கள் எல்லோரும் இரவு நேரம் விரும்பிப் பார்க்கும் சீரியலின் சென்டர் ஆஃப் அட்ராக்ஷன் கேரக்டரில் நடிக்கும்  நடிகை அவர். அந்தப் பொண்ணு மீது சீனியர் மந்திரி ஒருவருக்கு ஆறாத கிறக்கம், தீராத மோகமாம். அந்தப் பொண்ணுக்கு வலைவீச... இரண்டெழுத்து சீனியர் சரிப்பட்டுவரமாட்டார்னு அசோக் நகரில் இருக்கும் நான்கு எழுத்து மந்திரத்தைப் பெயராகக் கொண்ட "ஏற் பாட்டாளர்'’ஒருவரை அப்ரோச் பண்ணியுள்ளனர்.

சென்னையில் இருக்கும் முக்கிய ஸ்டார் ஓட்டல்கள் அனைத்திற்கும் "பெர்மனெண்ட் சப்ளையர்'’ இவர்தான். பிராமணப் பெண்ணான  இவர் கைவசம் இருப்பவர்கள் எல்லோருமே நன்கு முகம் தெரிந்த நடிகைகள்தான்.

இவரே அந்தப் பொண்ணை அழைத்துக்கொண்டு கூவத்தூருக்கு 4 கி.மீ. முன்பாக உள்ள வயலூரில் காரில் காத்திருக்க, ரிசார்ட்சில் இருந்து வந்த காரில் இவர்களை ஏற்றிக்கொண்டு உள்ளே போயுள்ளனர். போகும்போது இரவு மணி 10. அப்போது பெரும்பாலானவர்கள் அரை மயக்க நிலையிலேயே இருந்துள்ளனர். மந்திரியின் அறைக்குள் இவர் போனபோது, அங்கே அவரும் அதே நிலைதான். அந்தப் பொண்ணைப் பார்த்ததும் "நான் ஆசைப்பட்டுத் தான் உன்னைக் கூட்டிவரச்சொன்னேன். ஆனா ரெண்டு நாளா சாப்பாட்டுலயும் சரக்குலயும் என்னத்தக் கலந்து கொடுத்தானுகளோ யூரின்ல ரத்தம் கலந்து வருது... ஐ ஆம் வெரி சாரி'ம்மா எனச் சொன்னபடி சுருண்டு படுத்துவிட்டாராம்.

பயத்தில் வெடவெடக்க ஆரம்பித்த அந்தப் பெண்ணை அங்கி ருந்த பவுன்சர்கள் பதம் பார்த்துவிட்டார்களாம். கழுத்து, மார்பு பகுதிகளில் காயத்தோடு கதறியபடி காலை ஐந்தரை மணிக்கு வெளியேறி யிருக்கிறார் அந்த நடிகை. வெளியேறும்போது தி.நகர் எம்.எல்.ஏ.சத்யாவைப் பார்த் துள்ளார்.
""எனக்குத் தெரிஞ்சது இவ்வளவு... இன்னும் என் னென்ன கேவலங்கள் நடந் துச்சோ''’என்பதுடன் நிறுத்திக் கொண்டு விருட்டெனப் புறப்பட்டார், கடைசி வரை தன் பெயரை சொல்ல மறுத்த அந்தப் பெண்.ஈ.பா.பரமேஷ்வரன்  நக்கீரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக