இன்று
தமிழக பொறுப்பு கவர்னர் வித்யாசாகர் ராவ் மும்பையிலிருந்து ஜெட் ஏர்வேஸ்
விமானத்தில் கிளம்பி, மதியம் 3.30 மணியளவில் சென்னை வருகிறார். வந்தவுடன்
முதன்முதலாக சசிகலாவையும், அவரை ஆதரிக்கும் எம்.எல்.ஏக்களையும்
சந்திப்பதற்காக அப்பாய்ண்ட்மென்ட் தந்திருக்கிறார். இதையடுத்து தற்போதைய
காபந்து முதல்வரான ஓ.பன்னீர் செல்வத்திற்கு அப்பாய்ண்ட்மென்ட்
தந்திருக்கிறார். இது எப்படி நடந்ததென்றால் நேற்றிரவு சசிகலாவை ஆதரிக்கும்
எம்.எல்.ஏக்கள் டெல்லி சென்று ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை சந்தித்து
தமிழக பொறுப்பு கவர்னருக்கு எதிராக புகார் பட்டியல் தர வருகிறார்கள் என்ற
தகவல் பிரதமர் மோடிக்கு தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
நேற்று சசிகலா தலைமையில் அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடந்தது. அக்கூட்டம் முடிந்தவுடன் எம்.எல்.ஏக்கள் அனைவரும் சொகுசு பேருந்தில் மரக்காணம் அருகிலுள்ள பூவாத்தூரில் இருக்கும் கோல்டன் ரிசாட்ஸில் தங்க வைக்கப்பட்டனர். பிறகு 25 அதிமுக எம்.எல்.ஏக்கள் சென்னை விமான நிலையத்தில் போர்டிங் கார்டு வாங்கி டெல்லி கிளம்பும் விமானத்திற்கு தயாராக இருந்தனர். மற்ற அதிமுக எம்.எல்.ஏக்கள் இன்று விடியற்காலை 5.30க்கு டெல்லி கிளம்பும் விமானத்திலும், அடுத்து 6.30 மணிக்கு டெல்லி கிளம்பும் விமானத்திலும் செல்வதற்கு தயாராக இருந்தனர். இதனிடையில் கவர்னர் சென்னை வருகிறார், சசிகலாவிற்கு முதல் அப்பாய்ண்ட்மென்ட் என்ற உறுதியான தகவல் சசிகலாவிற்கு வருகிறது.உடனே நேற்றிரவு 8 மணிக்கு போர்டிங் கார்டுடன் டெல்லி செல்ல தயாராக இருந்த 25 அதிமுக எம்.எல்.ஏக்களுக்கும் டெல்லி செல்ல வேண்டாம் திரும்பி விடுங்கள் என தகவல் சொல்லப்பட்டது.
இன்று காலை டெல்லி கிளம்ப இருந்த எம்.எல்.ஏக்களுக்கும் கவர்னர் வருகிறார், நமது முயற்சி வெற்றி, சசிகலா தான் முதல்வர் ஆகப் போகிறார் என்ற தகவல் சொல்லப்பட்டது. இதோடு நிற்காமல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வீட்டிற்கு எம்.எல்.ஏக்களின் குடும்பத்தினர் வரவழைக்கப்பட்டிருந்தனர். ஓவ்வொரு எம்.எல்.ஏவிற்கும் முதல் கட்டமாக இரண்டரை கோடி ரூபாய் தரப்பட்டது. அடுத்த கட்டமாக மேலும் பணம் தரப்படும் என்ற உறுதியும் வழங்கப்பட்டது. இன்று விடிய விடிய எம்.எல்.ஏக்களின் குடும்பத்தினருக்கு பணம் பட்டுவாடா செய்யப்பட்டது. அதிமுக எம்.எல்.ஏக்கள் மெஜாரிட்டியாக தன்னை ஆதரிப்பார்கள் என்ற நம்பிக்கை தரப்பட்ட உடன் தான் சசிகலா உறங்க போயிருக்கிறார். ஆனால் கவர்னர் வில்லங்கமான முடிவோடு வந்திருக்கிறாரா என்பது இன்று மாலை தெரிந்து விடும். மின்னம்பலம்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக