புதன், 8 பிப்ரவரி, 2017

சசிகுறுப் கஸ்டடியில் இருந்து தப்பி ஓடிய எம் எல் ஏ சன்முகநாதன் பன்னீர்செல்வம் வீட்டுக்கு...

A ADMK MLA shanmuganathan ran away from bus to OPS house சென்னை: சசிகலா தரப்பால் பேருந்தில் சிறை வைக்கப்பட்ட எம்எல்ஏக்களில் ஒருவர் கிரீன்வேஸ் சாலைக்கு சென்றபோது நைசாக ஓபிஎஸ் வீட்டிற்குள் நுழைந்த சுவாரசிய சம்பவம் அரங்கேறியுள்ளது. கிரீன்வேஸ் சாலையில் உள்ள எடப்பாடி பழனிச்சாமி வீட்டில் ஆலோசனை நடத்த சென்றபோது எம்எல்ஏ சண்முகநாதன் யாருக்கும் தெரியாமல் ஓபிஎஸ் வீட்டிற்குள் நுழைந்தது தெரியவந்துள்ளது.
அதிமுக எம்எல்ஏக்கள் ஓபிஎஸ் அணிக்கு தாவுவதைத் தடுப்பதற்காக எம்எல்ஏக்கள் கூட்டம் முடிந்தவுடன் அவர்களை அப்படியே சொகுசு பேருந்தில் சிறைவைத்தது சசிகலா தரப்பு. அவர்களை மன்னார்குடி கும்பலுக்கு சொந்தமான நட்சத்திர ஹோட்டலில் தங்க வைப்பது என முடிவு செய்து அதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன.
எம்எல்ஏக்கள் ஓபிஎஸ்க்கு ஆதரவு தெரிவித்துவிடக்கூடாது என்பதில் கண்ணும் கருத்துமாக இருந்த மன்னார்குடி கோஷ்டி அவர்களின் செல்போன்களை பறித்துக்கொண்டு ஒரு எம்எல்ஏக்கு 4 பேர் என அடியாட்களையும் நியமித்திருந்தனர்
;மெரினாவிலேயே சுற்றிய பேருந்து
எம்எல்ஏக்கள் சிறைபிடிக்கப்பட்டிருந்த சொகுசு பேருந்து 3 மணி நேரமாக மெரினா கடற்கரையிலேயே சுற்றிக்கொண்டிருந்தது.  பின்னர் அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வீட்டில் ஆலோசனை நடத்த முடிவு செய்யப்பட்டு கிரீன்வேஸ் சாலைக்கு சென்றது.
<>கிரீன்வேஸ் சாலைக்கு சென்ற பஸ்
கிரீன்வேஸ் சாலையில்தான் முதல்வர் ஓபிஎஸின் வீடும் உள்ளது. இந்நிலையில் எடப்பாடி வீட்டிற்குள் செல்வதற்காக பேருந்து நின்றது. அதிலிருந்த அதிமுக எம்எல்ஏக்கள் அனைவரும் உள்ளே சென்றனர்.
ஓபிஎஸ் வீட்டிற்குள் நுழைந்த எம்எல்ஏ
அப்போது எம்எல்ஏ சண்முகநாதன் அங்கிருந்தவர்கள் கண்களில் மண்ணை தூவி விட்டு யாருக்கும் தெரியாமல் ஓபிஎஸ் வீட்டிற்குள் நுழைந்தார். பின்னர் ஓபிஎஸை சந்தித்த அவர் தனது ஆதரவை தெரிவித்தார்.
நொந்த மன்னார்குடி கோஷ்டி
மதியம் முதல் பாதுகாப்பாக பஸ்க்குள்ளேயே வைத்திருந்து கடைசியில் ஓபிஎஸ் வீட்லேயே கொண்டுச் சென்று விட்டுவிட்டோமே என மன்னார்குடி கோஷ்டி நொந்து போயுள்ளது. tamiloneindia

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக