திங்கள், 13 பிப்ரவரி, 2017

சொத்துக்குவிப்பு வழக்கில் நாளை தீர்ப்பு ! ஜெயலலிதா, சசிகலா, இளவரசி , சுதாகரன் மீதான....

ஜெயலலிதா,சசிகலா, இளவரசி, சுதாகரன் மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் நாளை காலை 10.30 மணிக்கு தீர்ப்பு வழங்குகிறது உச்சநீதிமன்றம். நீதிபதிகள் பினாகி சந்திரகோஷ், அமித்தவராய் ஆகியோர் தீர்ப்பு வழங்குகின்றனர். ஜெயலலிதா 1991 முதல் 1996 வரை முதல்வராக இருந்தபோது 66 கோடி சொத்து சேர்த்ததாகவும், வருமானத்தை விட அதிகமாக ஜெயலலிதா சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத்துறையால் வழக்கு தொடரப்பட்டது. இந்த சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய நால்வருக்கும் 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. இதை எதிர்த்து கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. மேல்மு றையீட்டில் கர்நாடக உயர்நீதிமன்றம் நீதிபதி குமாரசாமி, 4 பேரையும் வழக்கில் இருந்து விடுவித்தார். இந்த உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து கர்நாடகா உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தது. இந்த மேல்முறையீட்டு விசாரணையில் நாளை தீர்ப்பு வழங்கப்படுகிறது. நக்கீரன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக