புதன், 1 பிப்ரவரி, 2017

கடலில் கொட்டிய கச்சா எண்ணெய் சென்னை வரை பரவும்? மீன் வாங்கும்போது கொஞ்சம் யோசிக்கவும்

கச்சாஎண்ணெய் கசிந்தாலோ அல்லது விபத்துகளால் கொட்டிவிட்டாலோ அது மேன்மேலும் பரவாமல் இருக்க உடனடி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். கச்சா எண்ணெய் கையாளும் பெரும்பான்மையான நாடுகள் Oil spill Containment எனும் துறையில் பயிற்றுவிக்கப்பட்ட ஆட்களும் அதற்கான உபகரணங்களும் கொண்டிருக்கும்.
கடலிலே கொட்டும் எண்ணெயானது தரையிலே இருப்பது போல் ஒரே இடத்தில் நிற்காது. நீரோட்டத்திற்கு ஏற்ப அது பரவிக்கொண்டே இருக்கும்.
இதை தடுப்பதற்காக Boom, Skimmer, Incitu burning எனும் மூன்று முறைகளைக் கையாள்வர்.
இதில் Boom என்பது மிதக்கும் எண்ணெய் படலத்தைச் சுற்றி வேலி அமைப்பது போல் மிதவைகளைக் கொண்டு செய்வது. செலவும் கம்மியானது.
Skimmer எனப்படுவது இதற்கென உள்ள படகுகளைக் கொண்டு எண்ணெய்ப்படலத்தை உறிஞ்சுவது.


Incitu burning அந்த எண்ணெய் படலத்தை தீ வைத்துக் கொளுத்துவது. ஆழ் கடலில் இது சாத்தியம். மேலும் இந்த முறையில் Sludge எனப்படும் கசடுகளும் பெருமளவு குறைந்துவிடும். கரையோரத்தில் இம்முயற்சியில் ஆபத்து அதிகம்.
சென்னையில் விபத்தினால் கொட்டப்பட்ட எண்ணெய் படலத்தை சுத்தம் செய்வதற்கு இதில் எதையும் முயற்சி செய்யவில்லை. கைகளாலும், தண்ணீர் லாரி மோட்டார்களாலும் அதைக் கையாண்டு கொண்டிருக்கின்றோம். கைகளால் கையாளுவோருக்கு தகுந்த உபகரணங்களும் இல்லை. தண்ணீர் லாரிகளின் தரம் நமக்குத் தெரிந்ததுதான். சில நாட்களுக்கு சென்னைவாசிகளில் சிலருக்கு கச்சா எண்ணெய் தண்ணீருடன் இலவசமாக விநியோகிக்கப்படலாம்.
கடலில் கப்பல் போக்குவரத்து என்பது மிகப் பாதுகாப்பானது. காலநிலையில் ஏற்படும் மாற்றங்கள், புயல், சுனாமி ஆகியவற்றால் மோதல் ஏற்படுவது உண்டு. மனித தவறுகளால் விபத்து ஏற்படுவது மிகவும் குறைவு. காரணம், விபத்தைத் தடுக்கும் Electronics ஏராளம். சுற்றப்புரத்தைக் கவணிக்க Radar அமைப்பும், மிக அருகில் ஏதேனும் இருப்பின் அதைத் தெரிவிக்க Proximity Radarம், மேலும் Watch Keeping எனப்படும் மாலுமிகள் காவல் செய்வதும் உண்டு. மேலும் ஒரு துறைமுகத்திற்கு உள்ளும் புறமும் வந்து செல்ல Port Pilots எனப்படும் துறைமுக அதிகாரிகள் இருந்தால் மட்டுமே இயலும். கப்பலின் கேப்டன் தூக்கக் கலக்கத்தில் இயக்கியதால் விபத்து என செய்திகள் கூறுவது வழக்கம் போல பிதற்றல்.
கடற்கரையில் வாழும் மீனவனுக்குத்தானே இந்தப் பாதிப்பு. நமக்கென்னவென்று நிணைக்கும் சென்னைவாசிகளே,, இதே விபத்து சில கிமி முன்னால் கல்பாக்கம் கடற்கரையில் நடந்திருந்தால், எண்ணெய் கசிவுகளால் Sea Water coolant plant அடைபட்டிருந்தால் என்ன நடந்திருக்கும் என யோசியுங்கள்.
இந்த விபத்து மிகத் தீவிரமாக ஆராயப்படவேண்டியது.
துரதிர்ஷ்டவசமாக நமது அரசியலவாதிகளும், அரசு அதிகாரிகளும் இதில் எவ்வளவு தேற்றலாம் என்பதைத்தான் ஆராய்வர்.
- @G Cruz Antony Hubertt
Palai Karthik முகநூல் பதிவு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக